Advertisement

2 இடங்களில் தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பூர்:திருப்பூரில் நேற்று வீடு மற்றும் கோன் வைண்டிங் யூனிட் என இரு வேறு இடங்களில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.திருப்பூர், இடுவம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன், 45. நேற்று காலை இவர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது, காஸ் டியூப்பில் ஏற்பட்ட காஸ் கசிவால், தீப்பிடித்தது. இதில் வீட்டின் பல பகுதிகளுக்கு தீ பரவியது.தெற்கு தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது.கோன் வைண்டிங் நிறுவனத்தில் தீ திருப்பூர், காங்கயம் ரோடு, முத்தணம்பாளையத்தில் செல்வி என்பவருக்கு சொந்தமான கோன் வைண்டிங் நிறுவனம் உள்ளது. நேற்று காலை 10:00 மணியளவில், கோன் வைண்டிங் மெஷினில், ஏற்பட்ட மின் கசிவால், அங்கிருந்த பஞ்சு மற்றும் நுால் மீது தீப்பற்றியது. தெற்கு தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இவ்விரு தீ விபத்துகளில், சேதமடைந்த பொருட்கள் மதிப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement