Advertisement

ரோட்டை விட தாழ்வான இடத்தில் துவக்கப்பள்ளி

பொங்கலுார்:பொங்கலுார் வடமலைபாளையத்தில் உள்ள அரசு பள்ளி, ரோட்டை விட பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. இதை ரோட்டின் உயரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பொங்கலுார் வடமலைபாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி முன்பு கொடுவாய் பொள்ளாச்சி ரோடு செல்கிறது. முன்பு சம தளத்தில் ரோடு இருந்துள்ளது. பின், ரோடு மேம்படுத்தப்பட்ட போது, ரோட்டின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது.ரோட்டின் உயரத்திற்கு ஏற்ப பள்ளியின் உயரம் அதிகரிக்கப்படவில்லை. இதனால், அரசு பள்ளி ரோட்டை விட தாழ்வாக உள்ளது. எனவே, மழை காலங்களில் ரோட்டில் செல்லும் தண்ணீர் பள்ளி காம்பவுண்டுக்குள் வருவதை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், மாணவ, மாணவியர் கழிப்பறை கட்டடம் ரோட்டுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு மேற்கூரை இல்லை. ரோட்டில் செல்வோரால், கழிப்பறையில் இருக்கும் குழந்தைகளை பார்க்க முடியும். இது குழந்தைகளுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்துகிறது.எனவே, பள்ளியின் உயரத்தை ரோட்டின் உயரத்திற்கு ஏற்ப சமப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement