Advertisement

இனி, அதிகரிக்கும்! உள்நாட்டு ஆடை உற்பத்தி

திருப்பூர்:தேர்தல் விதிமுறைகள் வாபஸ் பெறப்பட உள்ளதால், திருப்பூர் ஆடை உற்பத்தி துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், கோல்கத்தா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை என, நாடுமுழுவதும் உள்ள வர்த்தகர்களிடம் ஆர்டர் பெறுகின்றன,
கோடை, குளிர், பண்டிகை கால உற்பத்தி முக்கியமானதாக உள்ளது.ஆடை தயாரித்து பெறும் வர்த்தகர்கள், அதற்கான தொகையை, 30 முதல் 50 நாட்களுக்குள், உற்பத்தி நிறுவனத்தின் வங்கி கணக்கில், சேர்ப்பது வழக்கம். கடந்த மார்ச் 10ல், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது; அன்று முதல், தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்குவந்தன.உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட பணத்தை, பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்; வங்கி கணக்குகளும், கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. கெடுபிடிகளுக்கு பயந்து, வெளிமாநில வர்த்தகர்கள், திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆடைக்கான முழு தொகையை வழங்க தயங்கினர். மொத்த தொகையில், ஒருபகுதியை மட்டும் வழங்கிவிட்டு, தேர்தலுக்குப்பின் மீத தொகையை தருவதாக கூறிவிட்டனர்.
ஆடைக்கான தொகை கிடைக்காமல், சிறு, குறு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருகின்றன. வேறுவழியின்றி, சில ஆயத்த ஆடை நிறுவனங்கள், ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கான கட்டணத்தை வழங்குவதில் காலம் தாழ்த்திவருகின்றன.நேரடியாக திருப்பூர் வந்து, ஆடை கொள்முதல் செய்து கொண்டுசெல்வதையும், வர்த்தகர்கள் நிறுத்திவிட்டனர். நிதி தட்டுப்பாடு மட்டுமின்றி, கோடை கால ஆடை வர்த்தகமும் பாதித்தது, பின்னலாடை துறையினரை கவலை அடையச் செய்தது.நேற்று முன்தினம், ஓட்டு எண்ணிக்கை நடந்தது. மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் முடிந்தநிலையில், வரும் 27ம் தேதி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபசாகிறது. இது, ஆடை உற்பத்தி துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே தயாரித்து அனுப்பிய ஆடைக்கான நிலுவைத் தொகையை, வெளிமாநில வர்த்தர்தகள் விரைவில் வழங்கிவிடுவர். குளிர் கால ஆடை தயாரிப்புக்கு, அதிகளவு ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. ஆர்டர்களை பெற்று, குறித்த காலத்துக்குள் ஆடை தயாரித்து அனுப்ப, தொழில் துறையினர் ஆயத்தமாகிவருகின்றனர்.

உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:தேர்தல் விதிமுறைகளால், வெளிமாநில வர்த்தகர்களிடம் ஆடைக்கான தொகை பெறமுடியாமல், திருப்பூர் நிறுவனங்கள் தவித்துவருகின்றன. தொழிலாளர் சம்பளம், ஜாப் ஒர்க் கட்டணம், கட்டட வாடகை உள்ளிட்ட நிதி தேவைகளை சமாளிக்க முடியாமல், திணறுகின்றனர்.
கோடை கால ஆடை வர்த்தகமும் குறைந்துவிட்டது.கோடையில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும்வகையில், குளிர் கால ஆடை தயாரிப்பு அதிகளவு ஆர்டர் கிடைக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. தேர்தல் முடிந்து, கட்டுப்பாடுகள் விரைவில் விலகுகின்றன. பின்னலாடை துறையில், பண புழக்கம் அதிகரிக்கும்; ஆடை உற்பத்தி துறை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.நிலுவை தொகையை அடுத்த சில நாட்களுக்குள் வழங்கிவிடுவதாக, வெளிமாநில வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தொகை எடுத்துவந்து, திருப்பூரில் ஆடை கொள்முதல் செய்யும் வர்த்தகர் எண்ணிக்கையும் உயரும். புதிய ஆர்டர்களை பெறுவது, ஆடை தயாரிப்பை தொடர்வதில் சிறு, குறு நிறுவனங்கள் சந்தித்துவந்த இடையூறுகள் நீங்கிவிடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நிலுவை தொகையை அடுத்த சில நாட்களுக்குள் வழங்கிவிடுவதாக, வெளிமாநில வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். தொகை எடுத்துவந்து, திருப்பூரில் ஆடை கொள்முதல் செய்யும் வர்த்தகர் எண்ணிக்கையும் உயரும். புதிய ஆர்டர்களை பெறுவது, ஆடை தயாரிப்பை தொடர்வதில் சிறு, குறு நிறுவனங்கள் சந்தித்துவந்த இடையூறுகள் நீங்கிவிடும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement