dinamalar telegram
Advertisement

ஆண்டிபட்டியில் அதிகரிக்கும் குப்பை மறு சுழற்சிக்கு புதிய யோசனை

Share
ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டியில் 25 கிலோவுக்கும் அதிகமான குப்பை வெளியேற்றும் நிறுவனங்கள் தாங்களாகவே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தற்போது பேரூராட்சி மூலம் குப்பை சேகரிக்கப்பட்டு, மக்கும், மக்காத குப்பை தனித்தனியாக பிரிக்கப்பட்டு கிடங்கில் சேர்க்கப்படுகிறது. குப்பை கிடங்கில் மறு சுழற்சி மூலம் மக்கும் குப்பை உரமாக்கப்படுகிறது.மக்காத குப்பை மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. தினம் சேரும் குப்பையை சேகரித்து, தரம்பிரித்து மறு சுழற்சிக்கு அனுப்புவது பேரூராட்சிக்கு பெரும் சவாலாகி விடுகிறது.பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது:தினமும் ஆண்டிபட்டியில் 10 டன் அளவுக்கும் அதிகமான அளவில் குப்பை சேகரிக்கப்படுகிறது.

அதிகம் குப்பை சேர்வதை கட்டுப்படுத்தவும், பேரூராட்சி நிர்வாகத்தின் பணிச்சுமை குறையவும் இனி வரும் காலங்களில் குடியிருப்புகளில் பொதுமக்கள் தாங்களே மக்கும், மக்காத குப்பைபை பிரித்து குப்பை சேகரிக்க வரும் பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 25 கிலோவுக்கும் அதிகமான அளவில் குப்பை சேர்க்கும் நிறுவனங்கள், குப்பை கிடங்கிற்கான இடம் ஒதுக்கி, அவர்களே மறு சுழற்சி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement