Advertisement

ரயில்வே கேட் தரைப்பால பணியை நிறுத்துங்கள்...: நெடுஞ்சாலை உதவி கோட்டப்பொறியாளர் வலியுறுத்தல்

சங்ககிரி: விபத்து ஏற்படும்படி, பாலம் கட்டப்படுவதால், பணியை நிறுத்த வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் வலியுறுத்தினார்.
சங்ககிரி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் மலர்விழி, சங்ககிரி டி.எஸ்.பி., அசோக்குமாரிடம் அளித்த மனு: இடைப்பாடி கோட்டம், சங்ககிரி உட்கோட்டம், முக்கிய சாலையான வைகுந்தம் - காளிப்பட்டி பிரிவு, எல்.ஜி., கேட், வைகுந்தம் - கோழிக்கால்நத்தம், பூசாரிநாயக்கன்வலவு ஆகிய பகுதிகளில், ரயில்வே தரைப்பாலப்பணி மேற்கொள்ளப்படுகிறது. வைகுந்தம் - காளிப்பட்டி பிரிவு, வைகுந்தம் - கோழிக்கால்நத்தம், பூசாரிநாயக்கன்வலவு சாலைகளில் மேற்கொள்ளப்படும் பாலத்தின் அகலம், 4.50 மீ., உயரம், 4.50 மீட்டராக உள்ளது. இச்சாலைகளில், 6.75 மீ., அகலம், 5 மீ., உயரத்துடன், கீழ்மட்ட பாலமாக அமைக்கப்பட வேண்டும். மேலும், வளைவில் அமைய உள்ளதால், எதிரே வரும் வாகன பார்வை தூரம், குறைவாக உள்ளதால், விபத்து ஏற்படும் விதத்தில் உள்ளது. பஸ், கனரக வாகனங்கள் முற்றிலும் செல்ல இயலாதபடி அமைய உள்ளது. நெடுஞ்சாலைத்துறை தலைமையிடம் முன் அனுமதியோ, நேர்பட குழுவிடம் அங்கீகாரமோ, ரயில்வே துறையிடமிருந்து பெறப்படவில்லை. போக்குவரத்து பாதிக்கும் விதமாக, பாலம் அமைய உள்ளதால், போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்து ஏற்படும் நிலை உள்ளதால், இப்பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

அசோக்குமார் கூறியதாவது: ரயில்வே உதவிப்பொறியாளர், பாலம் அமைக்கும் ஒப்பந்ததாரரை அழைத்து, மக்களுக்கு ஆபத்து ஏற்படாதபடியும், பஸ், கனரக வாகனங்கள் எளிதாக சென்றுவரும் வகையிலும் பாலம் அமைக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைத்துறை அளித்த கோரிக்கையை நிறைவேற்றும்படி, பாலம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள், சேலம் கோட்டம், ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்து, அதேபோல், பாலம் அமைப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement