Advertisement

பிறப்பு சான்றிதழ் கிடைத்ததால் மகிழ்ச்சி

இடைப்பாடி: இடைப்பாடி, செட்டிமாங்குறிச்சி, மோட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜரங்கன், 43. இவரது மனைவி சாந்தி, 29. இவர் களுக்கு, கடந்த ஜன., 2ல், இடைப்பாடியிலுள்ள, தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு, அதே மாதம், 5ல், குரும்பப்பட்டி வி.ஏ.ஓ., செல்லதுரையிடம் மனு அளித்தார். ஐந்து மாதமாக, சான்றிதழ் வழங்கப்படாதது குறித்து, நேற்று முன்தினம், நமது நாளிதழில் செய்தி வெளியானது. நேற்று, கிராம உதவியாளர் ராஜா, தொழிலாளி வீட்டுக்கே சென்று, சான்றிதழை வழங்கினார். இதனால், மகிழ்ச்சியடைந்த ராஜரங்கன், தினமலருக்கு நன்றி தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement