Advertisement

புதுப்பொலிவுக்கு மாறி வரும் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்

சேலம்: ரயில்வே ஜங்ஷன், புதுப்பொலிவுக்கு மாற்றப்பட்டு வருகிறது. சேலம், ரயில்வே ஜங்ஷனில், தினமும், 115க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த, 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்டேஷனின் முகப்புக்கு மட்டும், 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கார், பஸ், ஆட்டோ, நடந்து செல்லும் பயணிகள் என, தனித்தனி பிரத்யேக பாதைகள், வாகன நிறுத்துமிட வசதி, எல்.இ.டி., பொருத்தப்பட்ட கூரைப்பகுதி, நவீன சுவர் கடிகாரம், இரண்டாவது நுழைவு வாயிலில், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முற்றிலும் நவீனமாக மாற்றி யமைக்கப்பட்ட, ரயில்வே ஸ்டேஷன் முகப்பு கட்டடத்தில், ரயில்கள் வந்து செல்லும் நேரத்தை குறிக்க, நவீன திரைப்பலகை அமைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடம், நிழற்கூடம் உள்ளிட்டவை, விமான நிலையத்தில் அமைந்துள்ளதை போன்று, நவீன மயமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்பணி நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன், புதுப்பொலிவுக்கு மாறி வருகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement