Advertisement

மானிய விலையில் ஜிப்சம் வழங்க கோரிக்கை

Share
பனமரத்துப்பட்டி: சேலம் அருகே, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் கோடை மழையை பயன்படுத்தி, மானாவாரி நிலக்கடலை விதைக்கும் பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து, தேசிய தோட்டக்கலை வாரிய உறுப்பினர் பனமரத்துப்பட்டி சண்முகம் கூறியதாவது: நிலக்கடலை விதைத்த, 40வது நாளில் தேவையான அளவு ஜிப்சம் வயலில் இடவேண்டும். அதனால், மண்ணின் இறுக்கம் தளர்ந்துவிடும். வேர்கள் சுலபமாக மண்ணில் இறங்கும். அதிகமான காய்கள் உற்பத்தியாகி, மகசூல் அதிகரிக்கும். வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்களில் ஜிப்சம் இல்லை. ஒரு சில தனியார் உரக்கடையில் மட்டும் வைத்துள்ளனர். அங்கு, மானிய விலையில் ஜிப்சம் கிடைக்காது. தற்போது, நிலக்கடலை விதைக்கப்பட்டுள்ளது. களை பறிக்கும் சமயத்தில், வயலில் இடுவதற்கு ஜிப்சம் தேவை. எனவே மானிய விலையில் ஜிப்சம் வழங்க, வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். வேளாண் அதிகாரிகள் கூறுகையில், 'நிலக்கடலை விதை, நுண்ணூட்டம் ஆகியவை மானிய விலையில் வழங்க தயாராக உள்ளது. ஆனால், ஜிப்சம் இருப்பு இல்லை' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement