Advertisement

புகார் பெட்டி - சேலம்

விரட்டும் நாய்களால் அடிக்கடி விபத்து: ஆத்தூர், ராணிப்பேட்டை, சிவாஜி தெரு, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில், தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. குறிப்பாக, ஓட்டல், டீ, இறைச்சி கடைகள் உள்ள பகுதிகளில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை, நாய்கள் விரட்டுவதால், அடிக்கடி தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மேலும், பெண்கள் நடமாடவே அச்சப்படுகின்றனர்.

- பி.சுப்ரமணியன், ராணிப்பேட்டை.

குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்: சங்ககிரி, ஆறாவது வார்டு, பங்களா காட்டில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். இங்கு, தர்கா அருகேவுள்ள வீதியில், குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை. இதனால், பவானி சாலை அருகேவுள்ள குழாயில், தண்ணீர் பிடித்து, பெண்கள், தலையில் சுமந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால், அப்பகுதியில், குடிநீர் குழாய் அமைக்க, அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்தால், பெண்களுக்கு சிரமம் ஏற்படாது.

- அ.சக்திவேல், பங்களா காடு.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement