Advertisement

தொழிற்பயிற்சி பாட பிரிவு விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: தொழிற்பயிற்சி பாட பிரிவில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னை கலெக்டர், சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னையில், திருவான்மியூரில் உள்ள, அரசு தொழிற்பயிற்சி கூடத்தில், உடனடி வேலை வாய்ப்பிற்கான பயிற்சியில் சேர, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.இங்கு, கம்மியர் மின்னணுவியல், மின்சார பணியாளர், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளர் பிரிவுகளில், பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இந்த பயிற்சியில் சேரவிரும்புவோர், மே 31க்குள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement