Advertisement

நடவடிக்கை! கலவரத்தை தூண்டினால் கடும்...எஸ்.பி., சரவணன் எச்சரிக்கை

கடலுார்:லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை யொட்டி, மாவட்டத்தில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என எஸ்.பி., சரவணன் தெரிவித்தார்.
கடலுார் லோக்சபா தேர்தல் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் கடலுார் அரசு கல்லுாரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் பணிகள் இன்று (23ம் தேதி) நடக்கிறது. இதன் பாதுகாப்பு பணிகள் குறித்து எஸ்.பி., சரவணன் கூறியதாவது; ஓட்டு எண்ணும் பணியின்போது 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 7 போலீஸ் உட்கோட்டத்திற்கு தலா ஒரு அதிரடிப்படையும், கூடுதலாக பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு ஆகிய இரு இடங்களில் அதிரடிப்படை என மாவட்டத்தில் 9 அதிரடிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பதட்டமான கிராமங்கள் என கண்டறியப்பட்ட 247 இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியியில் ஈடுபடுகின்றனர். மொபைல் வாகன பேட்ரோல் 120 குழு, 32 இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டு எண்ணும் மையத்தில் ஏ.டி.எஸ்.பி., தலைமையில் 3 டி.எஸ்.பி., மற்றும் 530 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தொடர் பாதுகாப்பு பணியில் 90 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் இருப்பார்கள்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு வெளியாகும்போது கலவரத்தை துாண்டுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் மூலம் கட்சிகள், கட்சித் தலைவர்களை தரக்குறைவாக விமர்சனங்களை பரப்புபவர்களை கண்டறிந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.கூட்டம், ஊர்வலங்களின்போது கட்சியினர் கொடிகளுக்கு பிளாஸ்டிக் பைப்புகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். சவுக்கு கம்புகள் பயன்படுத்துதல் கூடாது.மாவட்டத்தில் எந்த விதத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எஸ்.பி., தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    திமுகா காரங்க ஜெயிச்சாலும் கலாட்டா தோத்தாலும் கலாட்டாதான்

Advertisement