Advertisement

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46

ஸ்ரீஹரிகோட்டா: ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

வெற்றி:புவி கண்காணிப்பை அதிகப்படுத்தும் வகையில், 'ரிசாட் 2பி ஆர்1' என்ற புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று(மே.22) காலை, 5.27 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் நேற்று துவங்கியது. இந்நிலையில், இன்று திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பயன்கள்:'ரிசாட் 2பி ஆர்1' செயற்கைக் கோளின் எடை 615 கிலோ; இதன் ஆயுட் காலம் 5 ஆண்டகள். இதில் உள்ள ரேடார் கருவிகள் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை. இரவு, பகல் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பூமியைத் தெளிவாக படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும். பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும்.

நிலைநிறுத்தம்:சரியான பாதையில் பயணித்த ராக்கெட், ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு அனுமதி:ராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க, ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள், தகுந்த பாதுகாப்புடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்ததை கண்டுகளித்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (21)

 • Venkatesh - bangalore,இந்தியா

  அய்யய்யோ இந்த டெக்னோலஜி மட்டும் பாக்கித்தானுக்கு தெரிஞ்சா நம்ம பிரதமரோட ராஜா தந்திரம் எல்லாம் வீணாகிடுமே ..

 • Venkatesh - bangalore,இந்தியா

  அய்யய்யோ int

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  சுதர்மன் ...நீங்க படு பயங்கரமா டெக்னாலஜியை பத்தி எழுதி இருக்கறதால நீங்க ஒரு டெக்னாலஜிஸ்ட்டு தெரியுது ...அதனால மொதல்ல பிரதமர் என்ன சொன்னாருன்னு திரும்ப வேணும்ன்னா படிச்சி பாருங்க ...அப்பால அப்படிக்கா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்ல வெளியான செய்தி ( ஒரு நிபுணர் சொன்னது )படிச்சிப்போட்டு வந்து நான் சொன்னது சரியா தவறான்னு சொல்லுங்க ..பெறவு இந்த அடியேனின் தாழ்மையான இன்னொரு விண்ணப்பம் ...சன் டி.வி மாதிரி மொக்க டீவியில நியூஸ் பாத்துட்டு ஒரு முடிவுக்கு வந்துடாதீங்க ...ஏன்னா அவிங்க சொல்ற நியூஸிக்கும் காட்டுற வீடியோவுக்கும் சம்மந்தமே இருக்காது ...டெக்னாலாஜிஸ்ட்டான தங்களிடம் இருந்து இந்த காவலக்காரன் பதில் எதிர்பார்க்கிறேன் ...I am waiting ....

 • ganapati sb - coimbatore,இந்தியா

  isro vinjanigalin thodarntha saathanaigalukku vaalthukkal

 • N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா

  பாமரன் ஜி ..இந்த செய்தியே உங்களுக்கு தான் ...சில தினங்களுக்கு முன்னாலே மோதி ஜி ராடார் பத்தி சொன்னப்போ நீங்க எல்லாம் கிண்டல் பண்ணுனீங்களே ...நியாபகம் இருக்கா ? பயணிகள் விமான ராடருக்கும் போர் விமான ராடருக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் விமர்சனம் வேற ...பிரதமர் ஒரு விஷயம் சொல்றாருன்னா சம்மந்தப்பட்டவர்களிடம் கேக்காமலா சொல்லுவார் என தெரியாமல் உடனே வசை பாடிட வேண்டியது ....பிரதமர் கூறியது சரி தான் என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ( May 18 ) மிக விவரமாக பதில் அளித்துள்ளனர் ... An Expert Explains: Is PM Narra Modi correct in his statement about Radar? s://indianexpress.com/article/explained/pm-modi-clouds-radar-interview-balakot-strikes-pakistan-5734208/

Advertisement