Advertisement

ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள்: சிவசேனா பாராட்டு

மும்பை: ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள் என பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான சிவசேனா பாராட்டியுள்ளது.

நாடு முழுவதும், லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாளை(மே 23) தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என ஆருடம் கூறுகின்றன.

இந்நிலையில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என யாரும் கூறத் தேவையில்லை. ஏனெனில், மக்கள் எல்லோரும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் சிவசேனா - பா.ஜ., கூட்டணி வரலாறு காணாத வெற்றியை பெறும்.


கடந்த லோக்சபா தேர்தலில் எதிர்கட்சியாக வருவதற்கு தேவையான வெற்றியை காங்., பெறவில்லை. ஆனால் இம்முறை, மத்தியில் காங்., எதிர்கட்சியாகிவிடும்; ராகுல் எதிர்கட்சி தலைவராகிவிடுவார். இது ராகுலுக்கு கிடைத்த வெற்றி. ராகுலும், பிரியங்காவும் கடின உழைப்பாளிகள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (26)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    இந்தாளு வெறும் வாய்ச்சவடால் தான் நெஸ்ட் காங்கிரஸ்கூட கூட்டணியாடாப்பா என்னஉழைப்பு காலேலேந்து ராவுவரை அய்யோடா சாமி மோடியை திட்டியே ரெண்டும் உழைச்சத்துக்கள் அதான் உண்மை ஈனமாந பிழைப்பு அடுத்து ராஹுலு விமானம் ஏறிடுவான் ரெஸ்ட் எடுக்க போயிடுவான் ஜாலியா அடுத்து எவனாச்சும் எழுதித்தருவதை தப்பும் தவறும் சொல்லி மாட்டிண்ணுமுழிப்பான் கண்றாவி , இந்தாளுக்கெல்லாம் வாயும் பேசும் முதுகும்பேசும்

  • Rameeparithi - Bangalore,இந்தியா

    ராகுலும் பிரியங்காவும் நாட்டை காப்பாற்ற உழைக்கவில்லை தாங்கள் சேர்த்த சொத்துக்களை காப்பாற்றத்தான் என்பதை மறக்க வேண்டாம்

  • sahayadhas - chennai,இந்தியா

    இங்கு சிறந்த அரசியல் மேதை யாரப்பா? கொஞ்சம் சொல்லப் பா சங்கு

    • sura Gopalan - ,

    • Vijay - Bangalore,இந்தியா

      சுறா ரொம்ப நாளா ஆளை காணோம்

  • sankar - ghala,ஓமன்

    ஆனால் ஒன்னு, எவளோ தான் அவமான பட்டாலும், தோல்வியை சந்தித்தாலும் திரும்பி நிக்கிறான்யா நம்ம பப்பு, இது உண்மையிலே அவரோட போராடும் குணத்தை காட்டுது, அரசியலில் அறிவு மட்டும் கொஞ்ச கற்றார் கண்டிப்பா வெற்றி பெறலாம் .

  • pannadai pandian - ,

    what is the use of hard work with out proper planning? Their jelous of modi and BJP led them to hard lies, spewing venom and hatred. This is something negative which costkhan cross to heavy loss in election.

    • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

      வெள்ளக்கார துரைக்கு பொறந்தவரு? தமிழ்ல கமெண்ட் போடுய்யா...? உடனே “இங்கிலீஷ் தெரியாத...”...னு நீ திட்டுவ.... நா... எப்பவுமே, என்நாடு, என்மக்கள், என்மொழி, என்ஊர்... என்ற கொள்கை கொண்டவன்... “காசு வருதுங்றதுக்காக... எதிரி ஊர்ல போய் உழைக்குற தேச விரோதி நானில்ல”? கூலி வேலை செஞ்சாலும்... என் தாய் நாட்டில்தான் கூலி வேலை செய்வேன்.. எதிரி நாட்டில் மேனேஜர் வேலை கொடுத்தாலும் “போடாங்... கொய்யால.?”... அப்படீன்னு சொல்லிட்டு வந்துடுவேன்... நான் எட்டப்பனாக இருந்து... சமஸ்தானங்களை பிச்சை பெற விரும்பவில்லை... வீரபாண்டிய கட்டபொம்மனாய் இருந்து மகிழ்ச்சியுடன் தூக்கு மரம் ஏறவும் தயாராக இருப்பவன்...

    • Divahar - tirunelveli,இந்தியா

      தினமலர் படிப்பவர்கள் தமிழில் தான் கருத்து எழுத வேண்டும் என கட்டாயப்படுத்தலாம். ஆங்கில பேப்பரில் ஆங்கிலத்தில் கருத்து எழுதட்டும். தமிழ் எழுத தெரியாதவர்கள் தமிழ் எழுத படித்துவிட்டு கருத்து எழுதவேண்டும் என தினமலர் சொல்ல வேண்டும் . இரண்டும்கெட்டான் வேலை எதற்கு ?

    • Vijay - Bangalore,இந்தியா

      android , IOS , laptop எல்லாம் வெளிநாட்டு காரன் கண்டுபிடிச்சது ...

Advertisement