Advertisement

சிறப்பான தேர்தல்: பிரணாப் பாராட்டு

புதுடில்லி: இந்த முறையும் தேர்தல் சிறப்பாக நடந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: அரசு அமைப்புகள் நன்றாக உள்ளன. இந்த அமைப்புகள் பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன. மோசமான தொழிலாளியே, தனது பொருட்கள் மீது கோபப்படுவார். சிறந்த தொழிலாளி, தன்னிடம் உள்ள பொருளை எப்படி சிறப்பாக பயன்படுத்த முடியும் என சிந்திப்பான் என்பது எனது நம்பிக்கை.
அரசு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று நாம் நினைத்தால், இந்த நாட்டில் அரசு அமைப்புகள் முன்னரே நன்றாக செயல்பட்டு வந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்கு காரணம் தேர்தல்களை ஒழுங்காக நடத்திய தேர்தல் ஆணையம்தான் காரணம். தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதல் தற்போது இருக்கும் தேர்தல் ஆணையர் வரை, அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
அனைவரும் நிர்வாக முறைப்படி நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாம் விமர்சிக்க முடியாது. இந்த முறையும் தேர்தல்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இந்த முறை 67.3 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். இது மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேல் ஆகும். நீண்ட நாள் கழித்து, குடிமகனாக நானும் ஓட்டுப்போட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.தேர்தல் ஆணையம் மற்றும் அதன் செயல்பாடுகளை காங்கிரஸ் தலைவர் ராகுல், மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு பிரணாப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு பொறுப்புஇந்நிலையில், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை:ஓட்டு இயந்திர முறைகேடு தொடர்பான புகார்களுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.
வாக்காளர்களின் தீர்ப்பை மாற்றும் முறைகேடுகள் தொடர்பான புகார்கள் கவலை அளிக்கிறது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஓட்டு இயந்திரங்களின் பாதுகாப்பான நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது.

ஜனநாயகத்தின் அடிப்படைடையே கேள்வி கேட்கும் எந்த யூகங்களுக்கும் இடமளிக்க கூடாது. வாக்களிக்கும் புனிததன்மை தான் மக்களின் ஆணை. அதன் மீது சிறதளவு கூட சந்தேகம் இருக்கக்கூடாது. எனவே வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பினை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் அவர்கள் அனைத்து யூகங்கள் மற்றும் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • Mugavai Anandan - Port Blair,இந்தியா

  காங்கிரஸ் கட்சியில் கறைபடாத கைக்கு சொந்தக்காரர் பிரணாப்பிமுகர்ஜி ,....அரசியலில் பொய் புரட்டு பேச தெரியாதவர் .பதவிகளுக்காக பல்லிளிக்கும் இந்த காலத்தில் எதையும் எப்பவும் யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாதவர்.

 • blocked user - blocked,மயோட்

  மொத்தத்தில் காங்கிரஸ் மட்டைகள் வெட்கம் கெட்ட வாத்துக்கள் என்று சொல்லி விட்டார் பிராணாப்.

 • Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்

  நிச்சயமாக இந்த முறை தேர்தல் அமைதியாக நடை பெற்றது, மேற்கு வங்கம் தவிர. VVPAT ஒரு அருமையான தீர்வு. நாம் யாருக்கு வோட்டு போட்டோம் என தெளிவாக காண்பித்து ஏழு நொடிகளில் உள்ளே அந்த காகிதம் விழுகிறது. உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிக்கு ஐந்து VVPAT எண்ணிக்கையையும் EVM கணக்கையையும் சரி பார்க்க வேண்டும். எல்லாம் சரியாக இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது. வாழ்க ஜனநாயகம். வளர்க இந்திய.

 • southindian - chennai,இந்தியா

  வணக்கம் ஐயா . பெரியவர்கள் சொன்னால் பெருமாள் சொன்னமாதிரி.

 • சீனு, கூடுவாஞ்சேரி - ,

  தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்திருந்தால் மூன்றுக்கும் மேற்பட்ட முறை உச்ச நீதிமன்றத்தில் தனது தேர்தல் பேச்சுக்கு மன்னிப்பு கோரிய ராஹுலை தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால் இவர்கள் இப்படி வசைபாடும் படியான நிலைமையில் தங்களை தாழ்த்திக் கொண்டுவிட்டனர்.

Advertisement