Advertisement

ராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் 28 வது ஆண்டு நினைவு நாளான இன்று (21.05.2019) டில்லியில் உள்ள அவரது நினைவு இடத்தில் காங்., தலைவர் ராகுல், ராஜிவ் மனைவி சோனியா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

பயங்கரவாத ஒழிப்பு தினம்



ராஜிவ் தமிழகத்தின் வருகையின் போது ஸ்ரீ பெரும்புதூரில் கடந்த 1991 ம் ஆண்டில் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இந்த மரணம் காங்., மற்றும் நாட்டை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொடூரமாக கொல்லப்பட்ட இந்நாளை பயங்கரவாத ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


28 வது நினைவுநாளான இன்று டில்லியில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், காங்., தலைவர் ராகுல், ராஜிவ் மனைவி சோனியா , மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர் வாத்ரா, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் காங்., மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.


மேலும் நாடு முழுவதும் காங்., தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக காங்., அலுவலகத்தில் காங்., தலைவர் அழகிரி மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அன்பை போதித்தவர்




ராகுல் அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எனது தந்தை மிக சிறந்த மனிதர் , அன்பானவர், இரக்கமானவர், பாசமானவர், எனக்கு, எனது தந்தை அனைவர் மீதும் அன்பு செலுத்த கற்று கொடுத்துள்ளார். யார் மீதும் வெறுப்பு கூடாது. மன்னிக்கும் தன்மை வேண்டும் என்பார். எனது தந்தையை இழந்து விட்டேன். அவரது மறைவுநாளில் அன்புடனும், நன்றியுடனும் நினைவுகூர்கிறேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (83)

  • R.Siva - ,

    The terrorists not only killed zRajiv Gandhi, but also killed 19 innocent lives. They also violated Indian Arms act , Indian explosives act ,and Indian Passport act. Hence , seeking sympathy for them is inhumane, heinous and will set a bad precedent.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    பயங்கரவாதி, பயங்கரவாதிகள் ன்னா என்ன ?? அவை, கோட்ஸே, புலிகளையும் உள்ளடக்கிய வார்த்தைகளா ?? இல்ல, கோட்ஸே மட்டும்தான் தீவிரவாதியா ??

  • ஜெகன் -

    என்னது, பயங்கரவாத ஒழிப்பு தினமா? அப்போ தமிழ்நாட்டில் ஒரு பிரதமரை கொன்ற பயங்கரவாதி தமிழன்னு ஹாசன் கூவுவாரா? அது தவிர எங்களுக்கு ஓட்டு போட்டா அந்த பயங்கரவாதிகளை விடுதலை செஞ்சுருவோம்ன்னு காங்கிரஸ் பொரியல் கட்சி கூவுதே? அத பத்தி வின்ஸி மூச்சு விடல்ல போல?

  • Ashanmugam - kuppamma,இந்தியா

    ராஜிவ் அவர் மரணத்தை அவரே உருவாக்கினார். ஏனெனில் கூட்ட நெரிசலில் மாலை போட ஓடிவந்த மனித வெடிகுண்டு காரி " தாணு"வை போலீஸ் தடுத்தபோது, ராஜிவ்காந்தி தான் மாலை போட அனுமதித்தார். இல்லாவிடில் இன்றும் இந்தியாவின் முடிசூடா மன்னனாக பிரதமர் பதவி வகித்திருப்பார்.

    • Darmavan - Chennai,இந்தியா

      அதுதான் விதி.ராஜிவால் உயிரிழந்த ஏதோ ஒரு உயிர் அல்லது அவர் உறவினர் இட்ட சாபம் இந்த வடிவில் வந்தது என்பது தெய்வத்தின் செயல்.எப்படி பஸ்மாசுரன் அழிந்தானோ தன் கையை தன் தலையில் வைத்துக்கொண்டு அது போல.

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

Advertisement