Advertisement

எதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது: சிவசேனா

மும்பை: 'பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 23ம் தேதி மாலை வரை நீடிக்கும் என்பது கூட உறுதியில்லை' என, சிவசேனா தெரிவித்துள்ளது.

லோக்சபாவுக்கு, ஏழு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும், மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என, தெரிவித்துள்ளன.

இது குறித்து, பா.ஜ., வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் பத்திரிகையான, 'சாம்னா'வில் எழுதப் பட்டுள்ள கட்டுரை: மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைய விடாமல் தடுக்கும் ஒரே எண்ணத்தில், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சிக்கின்றன. பல கட்சிகளின் ஆதரவில், மத்தியில் பலவீனமான அரசு அமைவது, நாட்டுக்கு நல்லதல்ல.


ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க, அங்கும் இங்கும், தேவையில்லாமல் ஓடுகிறார்.இந்த கூட்டணி, ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 23ம் தேதி மாலை வரை நீடிப்பதே உறுதியில்லை. இந்த கூட்டணியில், பிரதமராகும் ஆசையில் ஐந்து பேர் உள்ளனர். இந்த ஆசை, நிச்சயம் நிராசையில் தான் முடியும். ஆந்திராவில், தெலுங்கு தேசம் வெற்றி பெறுவதே சந்தேகமாக உள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு, தேவையற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • rishi - varanasi,இந்தியா

    தேர்தல் தோல்விக்கு கரணம் தேடுகிறார்கள் , இன்னும் ஒட்டு எண்ணப்படவில்லை அதற்குள் ஒட்டுஇயந்திரம் சரி இல்லை என்று குற்றம் கூற தொடங்கிவிட்டார்கள் , எதோ சாதி திட்டம் தீட்டுகிறார்கள். பிஜேபி கூட்டணி 320 - 360 வரை வெல்ல கூடும் , காரணம் மோடிக்கு எதிராக ஒரு வேட்பாளர் இல்லாதது, மக்கள் நிலையான ஆட்சியை விரும்புகிறார்கள் அதனால் வேறு வழியில்லை பிஜேபி தான் அதை தர முடியும் என்று ஓட்டளித்திருக்கிறார்கள் .

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டி இட்டு தேர்தலுக்கு பின் இணைவது எந்த வகை அரசியல் ? கர்நாடகாவில் நடக்கும் அவலம் போதாதா ???

  • M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா

    மிக மிக சரியானதே சிவசேனாவின் கருத்து மிக துல்லியமானதே

  • Kannan - Chennai,இந்தியா

    வன்முறை கும்பலில் காங்கிரஸும் இருக்குப்பா. சீக்கியர்களை கொன்று குவித்தது நினையவில்லையா. சிவசேனை சொல்வது சரிதான். சந்திரா பாபுவை நினத்தினால் :"- தென்னை மரத்திலே தேரோட்டமாம்" என்ற சொல்படி, தன்னுடைய டப்பா டான்ஸ் ஆடுகிறது இவருக்கு டெல்லியில் என்ன கழற்ற வேலை?. ஜெகன் வந்து இந்த ஆளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

    கொய்யால வாங்குன காசுக்குமேல கூவறாண்டா

    • Arunachalam - ,

      வருங்கால ஜனாதிபதி ஜீவன் வாழ்க!

Advertisement