Advertisement

இந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்!

புதுடில்லி: 'இந்திய குடும்பங்களில், தங்கம் கையிருப்பு, 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும்' என, உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.

இது குறித்து, கவுன்சிலின் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குனர், சோமசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய குடும்பங்கள் வைத்துள்ள தங்க ஆபரணங்கள் குறித்து, உலக தங்க கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, இந்திய குடும்பங்களில், 23 ஆயிரம் - 24 ஆயிரம் டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டது. இது, தற்போதைய ஆய்வில், 24 ஆயிரம் - 25 ஆயிரம் டன்னாக உயர்ந்திருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, இந்தியாவில், தங்கத்திற்கான தேவை, 760 டன்னாக இருந்தது. இது, இந்தாண்டு, 750 - 850 டன்னாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அன்னியச் செலாவணிக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது; அத்துடன், தங்கம் விலையும் குறைந்துள்ளது. இதனால், இந்தாண்டு, ஜன., - மார்ச் வரையிலான காலாண்டில், தங்கத்திற்கான தேவை, 5 சதவீதம் அதிகரித்து, 159 டன்னாக உயர்ந்துள்ளது.

அக் ஷய திருதியை மற்றும் திருமண சீசன் காரணமாக, நடப்பு, ஏப்., - ஜூன் காலாண்டிலும், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு, பருவ மழை நன்கு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கிராமப்புற பொருளாதாரம் நன்கு இருக்கும் என்பதால், தங்கம் விற்பனை உயர வாய்ப்புள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பு:



இந்திய குடும்பங்களில், தற்போது, 25 ஆயிரம் டன், தங்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கையிருப்பில், 608.80 டன், தங்கம் உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 40 சதவீதத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (45)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஒரு விமான நிலைய ஓடுபாதை ஒரு அடிக்கனத்தில் இந்தியாவில் தனிநபர்களிடம் இருக்கும் தங்கத்தைவைத்து அமைக்கலாம் என்று முன்பு எதிலோ படித்தது நினைவுக்கு வருகிறது

  • Sivagiri - chennai,இந்தியா

    போச்சு . ... கிராமுக்கு நுறு ரூபாய் ப்ராபர்டி டேக்ஸ் உடனே கட்டீட்டு தங்கத்தை வாங்கிக்கோ என்று இன்கம்டேக்ஸ் மூலமா எல்லா தங்கத்தையும் பிடுங்கிட்டுப் போகப் போராரு மோடி . . .

  • ஆப்பு -

    சொம்பை எடுத்து உள்ளே வெக்கணும். தங்கத்தை பறிமுதல் பண்ண ஆள் அனுப்புவாங்க.

  • மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    கண்கொள்ளா காட்சி. தங்க ஆபரணங்கள் பார்க்கும் போதெல்லாம் பரவசமாக இருக்கிறது. இன்னும் இன்னும் வாங்க வேண்டும் வாங்கி கொண்டே இருக்க வேண்டும். இறைவன் ஒரு தங்க அட்சய பாத்திரத்தை கொடுத்திருக்கலாம் பெண்களுக்கு.

  • Sivagiri - chennai,இந்தியா

    இப்போ எதுக்கு இந்த சர்வே ? . . அடுத்து மோடிதான் பிரதமராம் . . . ஐயோ . . என்ன நடக்குமோ . . . கெட்ட கெட்ட கனவா வருதே . . . முதலில் இந்த நியூஸ் மோடி கண்ணில் படாம அழிச்சிருங்க ப்ளீஸ் . .

Advertisement