Advertisement

புதிய ஆட்சியில் நன்மை தொடரட்டும்... மன்னவன் மனசிலே!

திருப்பூர்:யார் ஆட்சி அமைத்தாலும், தொழில் வளர்ச்சி திட்டங்கள், தொடர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, திருப்பூர் தொழில் துறையினர் மத்தியில் மேலோங்கியுள்ளது.திருப்பூர் பின்னலாடை துறையினர், உள்நாடு, ஏற்றுமதி ஆடை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுக்கு, 18 ஆயிரம் உள்நாட்டு வர்த்தகம்; 26 ஆயிரம் கோடிக்கு, ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது.
ஆடை வர்த்தக சந்தையில், போட்டி நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. பிற நாடுகளுடனான போட்டியை எதிர்கொண்டு, ஆர்டர்களை பெறுவதற்கு, மத்திய, மாநில அரசு திட்டங்களே கைகொடுக்கின்றன.அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து, தாங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள், திட்டங்களை தொழில் துறையினர் நிறைவேற்றிப் பெறுகின்றனர். தொழில் வளர்ச்சிக்கு, அரசின் முழு ஆதரவு அவசியமாகிறது.இதை கருத்தில் கொண்டு, மத்தியில், மாநிலத்தில், எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், கட்சி பேதங்கள் ஏதும் பாராமல், அரசுடன் நெருக்கமாக இருப்பதை, பின்னலாடை துறையினர் இயல்பாக கொண்டுள்ளனர். எதிர்க் கட்சியினருடனும், நட்பு பாராட்டுகின்றனர்.
தேர்தலுக்குப்பின், எதிர் கட்சி ஆட்சி அமைக்கும்பட்சத்தில், கடந்த கால அரசு கொண்டுவந்த திட்டங்களை கைவிடுவது, மாற்றம் செய்வது வழக்கமாக உள்ளது.ஏழு கட்ட லோக்சபா தேர்தல், தமிழகத்தில் நான்கு சட்டசபை தொகுதிக்கான ஓட்டுப்பதிவு, கடந்த 19ல் நிறைவடைந்தது.நாளை மறுநாள், ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கின்றன.எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும், தொழில் வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.
கடந்த கால திட்டங்களை கைவிட்டுவிடக்கூடாது. சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர், எளிதில் வங்கி கடன் பெற உதவும், 59 நிமிட கடன் திட்டம், தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம், முத்ரா கடன் திட்டம், ஏற்றுமதிக்கு பலம் சேர்க்கும் டியூட்டி டிராபேக், ஸ்டேட் லெவிஸ், எம்.இ.ஐ.எஸ்., உட்பட அனைத்து திட்டங்கள், சலுகைகளும், தொடர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:அரசு கொண்டுவந்த சில சீர்திருந்தங்களாலேயே, தொழிலாளர் திறன் மேம்பாட்டு திட்டத்தில், திருப்பூர் பின்னலாடை துறை பயனாளியாக மாற முடிந்துள்ளது.பயிற்சி அளித்து, திறன் மிக்க தொழிலாளராக பணி அமர்த்த முடிகிறது.ஜி.எஸ்.டி., ரீபண்ட் பெறும் நடைமுறைகள், ஆன்லைனில் தொடர்வதே சிறப்பு. அரசு அலுவலகங்களை நாடவேண்டிவந்தால், தொழில்துறையினருக்கு ஏராளமான இடையூறுகள் ஏற்படும். 59 நிமிட கடன் திட்டம், சிறு, குறு நிறுவனத்தினருக்கு கிடைத்த ஓர் வரப்பிரசாதம்.சிறந்த திட்டங்கள், கைவிடப்பட்டால், வர்த்தகம் பாதித்துவிடும்.
தொடர் சரிவை சந்தித்துவந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை, அரசு சலுகை விகிதங்கள் உயர்த்தப்பட்டபின், வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளன.எனவே, மத்தியில் ஆட்சி அமைக்கும் புதிய அரசு, எந்த ஒரு திட்டத்தையும் கைவிட்டுவிட கூடாது. தொழில் அமைப்பினர் கோரிக்கையை அடிப்படையாக கொண்டு, புதிய கூடுதலாக, திட்டங்களை உருவாக்கவேண்டும்.அமெரிக்காவுக்கான வர்த்தகத்தை உயர்த்துவதற்கான சூழல் நிலவுகிறது. வாய்ப்பை பயன்படுத்த, அரசின் உதவி மிக அவசியமாகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement