புதுடில்லி : 7-வது இறுதிக்கட்ட லோக்சபா தேர்தலில்,60.21 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மொத்தம் 59 தொகுதிகளுக்கு நாடு முழுவதும் நடந்தது.
இந்திய லோக்சபா 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று (மே 19 )நடைபெற்று வருகிறது.பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் சராசரியாக 60.21 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. மே. வங்கத்தில் 73.05 சதவீதமும், ஜார்க்கண்டில் 70.05 சதவீதமும், ம.பி.,யில் 69.38 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 66.18 சதவீதமும், சண்டிகரில் 63.57 சதவீதமும், பஞ்சாபில் 58.81 சதவீதமும், உ.பி.,யில் 54.37 சதவீதமும், பீஹாரில் 49.92 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
இந்திய லோக்சபா 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று (மே 19 )நடைபெற்று வருகிறது.பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது.
It shows the voting interest of the people of our country at present.