Advertisement

அரவக்குறிச்சியில் தி.மு.க., 2 ஆயிரம் ரூபா டோக்கன் விநியோகம்

பரமத்தி : கரூர் பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி தொகுதியில், ஆர்.கே.நகர் 20 ரூபாய் டோக்கன்களைப் போலவே தி.மு.க.,வினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்தனர். அதனை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

ரூ.2 ஆயிரம் டோக்கன் :



அரவக்குறிச்சி தொகுதியில் உள்ளது கார்வழி பஞ்சாயத்து. இங்குள்ள சீலநாயக்கன்பட்டி அண்ணாநகரில், தி.மு.க.,வினர் ஓட்டுக்கு பணம் தருவதற்காக மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து, அவற்றை டோக்கன்களாக விநியோகித்து வந்தனர்.

காலையில் ஓட்டு ; மாலையில் பணம் :



தி.மு.க., பரமத்தி ஒன்றிய பொருளாளர் ஜெகநாதன் தலைமையில் இன்று வாக்குப்பதிவு நேரத்தில் தி.மு.க.,வினர் வேட்பாளர் செந்தில்பாலாஜிக்காக இந்த டோக்கன்களை விநியோகித்துள்ளனர். ஓட்டுப்போட்டுவிட்டு 2 ஆயிரம் ரூபாய் டோக்கன்களை மாலையில் கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் தரப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இதை அறிந்து அங்கு அதிமுகவினர் குழுமினர்.

பறக்கும் படை :



அ.தி.மு.க., கார்வழி பஞ்சாயத்து கிளை செயலாளர் சிவக்குமார் தலைமையிலான சிலர் தேர்தல் பறக்கும்படைக்கு தகவல் கூறினர். பின்னர், டோக்கன் விநியோகித்த தி.மு.க.,வினரை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் டோக்கன்களை பறிமுதல் செய்தனர். ஆனால், தி.மு.க.,வினர் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து தேர்தல் பார்வையாளரிடம் அ.தி.மு.க., கார்வழி கிளைச்செயலாளர் சிவக்குமார் புகார் அளித்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்க ;



செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், '' ஆர்.கே.நகரில் அ.ம.மு.க.வினர் 20 ரூபாய் நோட்டுகளை டோக்கன்களாக அளித்து புகழ்பெற்றனர். அரவக்குறிச்சியில் தி.மு.க.,வினர் செந்தில்பாலாஜிக்காக அதே பார்முலாவை கையாண்டுள்ளனர். தேர்தல் கமிஷன் முறையாக விசாரித்து, தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியை தகுதிநீக்கம் செய்யவேண்டும்,'' என்றார்.

ஐ.ஜி., விசாரணை :



இந்நிலையில், கார்வழி அரசு உயர்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடியில் திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி., லலிதா லட்சுமி விசாரணை நடத்தினார். அவரிடம், சுயேட்சை வேட்பாளர் ஜோதி சுதர்சனன் 2 ஆயிரம் ரூபாய் டோக்கன் குறித்து புகார் அளித்தார். அதுகுறித்து விசாரிக்கவே தான் வந்ததாக ஐ.ஜி., அப்போது தெரிவித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (46)

  • JeevaKiran - COONOOR,இந்தியா

    இதெல்லாம் சரி. ADMK பிரிந்தபோது இரட்டை இல்லை சின்னத்தை பெறுவதற்கு தினகரன் கோடிக்கணக்கில் டெல்லியில் தலைமை தேர்தல் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வழக்கு பதிவானதே? அது என்ன ஆனது?

  • Arunachalam - ,

    கமல்ஹாசன் ஒன்றும் சொல்லவில்லை. ஏன்?

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    என்னைக்குத்தான் நேர்மையாக வெற்றி பெற்றனர் இந்த கயவர்கள்? பொய், பித்தலாட்டம், வன்முறை, இப்படியே வளர்ந்த கட்சி. மக்கள் ஏன் புறக்கணிக்கவில்லை?

  • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

    இதெல்லாம் ஒரு பொழப்பு இவனுங்க திருமங்கலத்தில் ஆரம்பிச்சு வச்சது... இந்தத் திராவிட வியாபாரிகள் ஒழிந்தால்தான் நாடு நலம் பெறும்

  • ஆப்பு -

    இதில் தவறு என்ன இருக்கு? மத்திய, மாநில அரசுகள் வங்கிக் கணக்கில் போடலாம். இவிங்க ஜெராக்ஸ் எடுத்து குடுக்கக் கூடாதா?

    • blocked user - blocked

      உனக்கெல்லாம் ஓட்டுரிமை கொடுத்து இருக்கிறார்களே... அவர்களை சொல்லவேண்டும்.

Advertisement