Advertisement

தேர்தல் கமிஷனுக்கு மோடி நன்றி

கேதார்நாத்; நாம் எதையும் எடுப்பதற்காக பிறக்கவில்லை. கொடுப்பதற்காவே பிறந்துள்ளோம் என பிரதமர் மோடி கேதார்நாத்தில் தியானம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.

லோக்சபா தேர்தல் முடிந்து 2 நாள் கேதார்நாத், பத்ரிநாத் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு முழுவதும் தியானம் செய்தார். இன்று ( 19 ம் தேதி ) குகையில் இருந்து வெளியே வந்த மோடி நிருபர்களிடம் பேசுகையில்;



கொடுக்கவே பிறந்துள்ளோம்





கேதார்நாத்தில் வழிபட்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேதார்நாத்துக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கேதார்நாத் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். நான் இறைவனிடம் யாருக்காகவும், எதையும் கேட்கவில்லை.



இந்தியாவுக்காக மட்டுமல்ல, மனித நேயத்திற்காக பிரார்த்தனை செய்தேன். நாட்டு மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்தேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எடுப்பதற்காக அல்ல. இவ்வாறு மோடி கூறினார்.

தேர்தல் கமிஷனுக்கு நன்றி



தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்திற்கு அனுமதி அளித்த தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்து கொண்டார், மோடி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (72)

  • Sandru - Chennai,இந்தியா

    முக்கிய கூட்டணி கட்சியான தேர்தல் கமிஷனுக்கு இவர் நன்றி தெரிவித்ததை பாராட்ட வேண்டும்.

  • SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா

    கடவுளை வழிபட தடை போடாது தேர்தல் கமிஷன். ஏன் தடை போடனும் . தமிழ் நாட்ல ராணுவ எலிகாப்படர் கொடுத்த தற்கு ஓபிஎஸ் நன்றி சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினாரே அதுபோல் அல்ல இது. இறைவனை வழிபட தியானம் செய்யதேர்தல் கமிஷன் வேண்டாம்னா சொல்லும். பிரதமர் ஓய்வில்லா உழைப்பால் இறைவனிடம் மன அமைதியை பெற சென்றார் தவறில்லை ...

  • ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா

    திமுக போல திருடவில்லை, காங்கிரஸ் ஆட்சிபோல மக்கள் கதறவில்லை, மம்தா போல ரவுடிகள் அராஜகம் இல்லை, கம்யூனிஸ்ட் போல மத அவமதிப்பு இல்லை, தி.க போல சாமி சிலைகளை திருடவில்லை எனவே மிக மிக நல்லாட்சியை மோடி கொடுத்தார்............ஆனாலும் ஊழல்திமுக மற்றும் கட்டிங் காங்கிரஸ் என அழைக்கப்பட்ட கட்சிகளுக்கும் அதன் கோமாளி தலைவர்களுக்கும் பேதி மாத்திரை இல்லாமலே.......வயிற்று போக்கு ஆரம்......பம்...பம்....பம்......... ..

  • Darmavan - Chennai,இந்தியா

    நுணலும் தன்வாயால் கெடும் மோடி தேர்தல் கமிஷன் அனுமதியை பேச வேண்டுமா வேதனை. இந்த உளறுவாய் நிறுத்தப்பட வேண்டும்.

  • ஆப்பு -

    பேங்கு கணக்குலேருந்து உருவுனதெல்லாம்?

    • sankar - new jersy

      உன் பணத்தை எப்போ மோடி எடுத்தாரு , ஓஹ் கள்ள panama அப்போ உறுவ தான் செய்வாரு

Advertisement