Advertisement

"ரொம்ப காலம் வேண்டாமே"- நிதிஷ்

பாட்னா: லோக்சபா தேர்தல் நடந்து முடிக்க ரொம்ப காலம் எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நிருபர்களிடம் கூறினார். நாடு முழுவதும் இன்று 7 ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பாட்னாவில், முதல்வர் நிதிஷ்குமார், லக்னோவில் உ.பி முதல்வர் யோகி , பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஓட்டளித்தனர்.
ஓட்டளித்த பின்னர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நிருபர்களிடம் பேசுகையில்: தற்போது லோக்சபா தேர்தல் நடத்தி முடிக்க அதிக காலம் எடுத்து கொள்ளப்படுகிறது. மேலும் பலக்கட்டமாக நடப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். நாடு முழுவதும் நடக்கும் ஓட்டுப்பதிவில் அதிக இடைவெளி தவிர்க்கப்பட வேண்டும்.


ஓட்டுப்பதிவு முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாக முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை சரி அல்ல. இது தொடர்பாக அனைத்து தலைவர்களுடனும் பேசவுள்ளேன். மேலும் அனைவருக்கும் இது தொடர்பாக கடிதமும் எழுதுவேன். இவ்வாறு நிதிஷ் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (19)

  • S.Baliah Seer - Chennai,இந்தியா

    காலம் கடந்து சொல்கிறீர்கள். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை.

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

    நான்கு வாரங்கள் நடப்பதால் பீஜேபியே அந்த அந்த மாநிலங்களில் சென்று manila கட்சிகளை தோலுரிப்பதை இவர்கள் விரும்பவில்லை போலும் . ஐந்து வருஷம் ஆட்சியா மாற்ற காத்திருக்கும் மக்களுக்கு ஒரு மாதம் பிரச்சார அனுபவங்களை கேட்கட்டுமே . மேலும் ஒரு மாநிலத்தில் அவர்கள் கேட்க போட்டாவது அதிக பட்சமா பதினான்கு நாட்கள் தான்

  • ஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா

    எப்படி நடத்தினாலும் திமுக பணம் கொடுப்பதை நிறுத்தாது......

    • Paramasivam - Chennai,இந்தியா

      பணம் கொடுத்தாலும் தோற்கும் கட்சி தி மு க

  • kulandhai Kannan -

    ஒரு வாசகமானாலும் திருவாசகம். மூன்று வாரங்களில் முடிக்கவேண்டும்.

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    நியாயம் தான். இவ்வளவு இடைவெளி தேவையில்லை. 2 வாரங்களுக்குள் முடிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஏனென்றால் ஒரு இடத்தின் ஒட்டு பதிவு மற்ற இடங்களை பாதிக்க கூடும்.

    • Achchu - Chennai,இந்தியா

      ஆக பார்த்தாரைப் பார்த்து பரதேசம் போகும் செம்மறி ஆட்டுக் கூட்டமா?

Advertisement