Advertisement

வாலிபர்களிடம் காவலர்கள் பணம் பறிப்பு

கானத்துார் : கடற்கரையில், வாலிபர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக, கானத்துார் காவலர்கள் மீது, புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருவான்மியூரைச் சேர்ந்தவர்கள் கார்த்திக், 25, எஸ்வந்த், 28. நேற்று முன்தினம் இரவு, பனையூர் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.இருவரிடமும், ரோந்து பணியில் இருந்த, பாலசுப்பிரமணியன், தணிகாசலம் ஆகிய போலீசார், 2,000 ரூபாய் மிரட்டி பறித்ததாக கூறப்படுகிறது.சம்பவம் குறித்து, கானத்துார் ஆய்வாளர், அனந்தஜோதி, இரு போலீசாரிடமும் விசாரிக்கிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement