Advertisement

சிகாகோவில் உலகத் தமிழ் மாநாடு

சென்னை : ''இம்முறை சிகாகோவில் நடைபெற உள்ள, உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டிற்கு, தமிழகத்தில் இருந்து, 500 பேரை அனுப்ப, அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது,'' என, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர், கே.பாண்டியராஜன் பேசினார்.அண்ணா சாலை, தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கில், 'கவிதை உறவு' இதழின், 47ம் ஆண்டு விழா, நேற்று மாலை நடந்தது.நிகழ்ச்சியில், பேராசிரியர் ரா.மோகனுக்கு, உரைநடை வேந்தர் விருது; திருப்பூர் கிருஷ்ணனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது; கவிஞர் ரவிபாரதிக்கு, டாக்டர் விக்கிரமன் விருது; டி.கே.எஸ். கலைவாணனுக்கு, முத்தமிழ் மாமணி விருது வழங்கப்பட்டது.

கவிஞர் இளவரச அமிழ்தனுக்கு, தமிழ்மாமணி விருது; பெ.மயிலவேலனுக்கு, பதிப்புச் செல்வர் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு படைப்பாளர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், கவிதை உறவு இதழின் ஆண்டு மலரை, நீதிபதி ஜோதிமணி வெளியிட, ஆலிம் முஹம்மது சாலிஹ் டிரஸ்ட் செயலர், சேகு ஜமாலுதீன் பெற்றுக் கொண்டார்.கவிதை உறவு ஆசிரியர், ஏர்வாடி. எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய, 'முகத்தில் முகம் பார்க்கலாம்' என்ற புத்தகத்தை, இணை கமிஷனர், ஆர்.சிவகுமாரும், 'வாழ்க்கை வாழத்தான்' என்ற நுாலை, கரூர் வைஸ்யா வங்கி துணைப் பொது மேலாளர், வி.அன்புராஜும் வெளியிட்டனர்.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை துறை அமைச்சர், கே.பாண்டியராஜன் பேசியதாவது:ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், தமிழுக்கு சேவை செய்து வருகிறார். உலகத் தமிழ் ஆய்வு மாநாடு, இம்முறை சிகாகோவில் நடைபெறுகிறது.தமிழகத்தில் இருந்து, 500 பேரை அனுப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

முதல்வர், இ.பி.எஸ்., பங்கேற்க வாய்ப்புள்ளது.கீழடி அகழ் வைப்பகம்அமைக்க, தமிழக அரசு, 1 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. மத்திய அரசிடம், 2 கோடி ரூபாய் கேட்டுள்ளோம்.தமிழர்கள் பெருமையைபறைசாற்றும், கீழடி, ஆதிச்சநல்லுார், பொற்கை ஆகிய மூன்று அகழ் வைப்பக அருங்காட்சியம், மிக விரையில் திறக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் பேசினார்.பா.ஜ., மூத்த தலைவர், இல.கணேசன் பேசியதாவது:அறிவும், அகங்காரமும் ஒன்றுக்கு ஒன்று உடன் பிறந்தது.

தனது அறிவின் காரணமாக, புகழ் கூடுபவர்களுக்கு, கர்வமும் வந்து விடும். கலைஞர்களுக்கு, கர்வம் இயற்கையாக உள்ளது. ஆனால், ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், அதற்கு நேர்மாறாக உள்ளார்.தமிழ் இலக்கிய கூட்டங்களில், பல முறைகள் நடக்கின்றன. பல விஷயங்கள், தேவையின்றி செய்யப்படுகிறது.இலக்கிய விழாக்களை எப்படி, தமிழுக்கு பயன்படும் விதமாக நடத்த வேண்டும் என, தமிழ் அமைப்புகளுடன் கூடி, ஆலோசித்து வரைமுறை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement