Advertisement

போலீஸ் டைரி

மதுபாட்டில்கள் கடத்தியவன் கைதுவண்ணாரப்பேட்டை: வண்ணாரப்பேட்டை, கண்ணன் ரவுண்டானா அருகே, போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அவ்வழியே வந்த ஆட்டோவை சோதனையிட்டனர். அதில், மதுபாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட, கொருக்குப்பேட்டை, அண்ணா நகர், 4வது தெருவைச் சேர்ந்த கோபி, 37 என்பவனை, வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்து, 350 மதுபாட்டில்கள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

நகை திருடியவன் கைது வேளச்சேரி: வேளச்சேரி, ஏ.ஜி.எஸ்., காலனியைச் சேர்ந்தவர், முகேஷ், 30. இவர், வெளியூர் சென்றுவிட்டு, மார்ச் 21ம் தேதி, வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 23 சவரன் நகை, 80 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வேளச்சேரி போலீசார் விசாரணையில், தேனாம்பேட்டையைச் சேர்ந்த பழனி, 39, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரி, 40, ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. கடந்த மாதம், பழனியை கைது செய்தனர். நேற்று, ஹரியை கைது செய்த போலீசார், அவனை சிறையில் அடைத்தனர். நகை பறிமுதல் செய்யப்பட்டது.

மொபைல் பறித்த இருவர் கைதுவிருகம்பாக்கம்: விருகம்பாக்கம், சின்மயா நகர், சித்திரை தெருவைச் சேர்ந்தவர், புஷ்பராஜ், 38; கோயம்பேடு மார்க்கெட்டில், காய்கறி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே, மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த, மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்தனர். பொதுமக்கள், அந்த நபர்களை மடக்கி பிடித்து, விருகம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்டவர்கள், எம்.ஜி.ஆர்., நகர், சூளைப்பள்ளத்தைச் சேர்ந்த தினேஷ், 22 மற்றும் 18 வயது சிறுவன் என, தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.ரூ.6 லட்சம் மதிப்பு மொபைல் திருட்டுஐ.சி.எப்: அண்ணா நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர், முகமது முஸ்தபா, 35; வில்லிவாக்கம், பாட்டை சாலையில், மொபைல் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடைக்கு வந்த போது, ஷட்டர் உடைக்கப்பட்டு, கடையில் இருந்த, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 மொபைல் போன்கள், 97 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போயிருந்தது. கண்காணிப்பு கேமராவையும், மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.மாணவர்களை குத்தியவன்கள் கைதுபம்மல்: குரோம்பேட்டை, நாகல்கேணியைச் சேர்ந்த மாணவர் இருவர், நேற்று முன்தினம் இரவு, குரோம்பேட்டை வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, வாகனத்திற்கு வழிவிடாத காரணத்தால், அவ்வழியாக சென்ற மற்றொரு தரப்பினருடன் தரகாறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர், மாணவர்களை கத்தியால் குத்தினர். இதில், இருவரும் காயமடைந்தனர். சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, மாணவர்களை குத்திய, குரோம்பேட்டையைச் சேர்ந்த நித்தியானந்தம், 22, மதன், 42, ஆகிய இருவரை கைது செய்தனர்.6 பேருக்கு, 'குண்டாஸ்'சென்னை: திருவொற்றியூரைச் சேர்ந்தவன்கள் அகில், 24, கணேஷ், 24, கார்த்திக், 23. புளியந்தோப்பைச் சேர்ந்தவன், ரூபன், 31. வியாசர்பாடியைச் சேர்ந்த ஜெகன், 28, பட்டாபிராம், சுரேஷ், 23, ஆகியோர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி, ஆறு பேரையும், குண்டர் சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.மொபைல் பறித்தவன்கள் கைதுகிண்டி: கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர், நிஷா, 32. நேற்று முன்தினம் இரவு, மூன்று பேர் சேர்ந்து, நிஷாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரது மொபைல் போனை பறித்தனர். கிண்டி போலீசார், நேற்று, அதே பகுதியைச் சேர்ந்த அஜய், 19, மற்றும் இரண்டு சிறுவர்களை கைது செய்தனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement