Advertisement

பாரபட்சமின்றி தேர்தல்: மம்தா கடிதம்

கோல்கட்டா: மே.வங்கத்தில், அமைதியாகவும், சுதந்திரமாகவும், மத்திய அரசின் தலையீடு இன்றி பாரபட்சம் இல்லாமல் தேர்தல் நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு, அம்மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: மே.வங்கத்தில் இறுதிகட்டமாக மே 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அமைதியாகவும், மத்திய அரசின் தலையீடு இன்றி பாரபட்சம் இல்லாமல் நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். நாட்டின், ஜனநாயக அமைப்புகள் மற்றும் கூட்டாட்சி தத்துவ்தை காக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை மதிக்க வேண்டும். மத்திய அரசின் தலையீடு காரணமாக மாநிலத்தில், சட்ட விரோதமான ஒரு தலைபட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில நிர்வாகம், அதிகாரிகள், சாமான்ய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.



மேற்கு வங்கத்தின் பாரம்பரியம் கலாசாரத்தை சீர்குலைக்கும் சதி திட்டத்துடன் பா.ஜ., சார்பில் பேரணி நடத்தப்பட்டது. தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு பார்வையாளர்களும் தங்களது பணியை சரிவர செய்யவில்லை. மத்திய அரசு, பா.ஜ., சார்பில்,என்ன அறிவுரை கொடுக்கப்பட்டதோ, அதன்படியே அவர்கள் செயல்பட்டனர். இது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (17)

  • கோகுல்,மதுரை -

    தேசிய தலைவர்களின் ஹெலிகாப்டரையே இறங்க விடவில்லை. சாமனிய மக்களை உங்கள் குண்டர்கள் கால்பந்து போல் பறக்க விடுகிறார்கள். இதிலிருந்தே உங்க ஜனநாயகம், கூட்டாச்சி தத்துவம் எல்லாம் தெரிகிறது.

  • sankar - new jersy,யூ.எஸ்.ஏ

    இந்தம்மா சொல்றது சரி பாரபட்சம் இல்லாமல் பங்களாதேஷ் காரணையும் மேற்கு வங்க தேர்தலை ஒட்டு போட அனுமதிக்காது . எலகிஷன் கமிஷன் திருந்தானும்

  • Sivagiri - chennai,இந்தியா

    விஜய்காந்த் பாணியில் :- ஹேய் . . . நாங்க என்ன வேணாலும் செய்வோம் - எப்பிடி வேணாலும் பேசுவோம் - ஏன்னா இது எங்க ஸ்டேட் - வேற டில்லி ஆளுங்களுக்கு இங்கே வேலை இல்ல . . . ஆனா தேர்தல் கமிஷன் நடுநிலையோடு - அதாவது எங்களுக்கு மட்டும் வேலை செய்யணும் . . . இல்லேனா எவனும் ஸ்டேட்டுக்குள்ள வர முடியாது . . .

  • விமர்சகன் - kovai,இந்தியா

    நீங்க மட்டும் பாஜகவினரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்காமல் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்வீர்கள்.என்ன நியாயம்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    தேர்தல் மட்டும் நேர்மையாக நடந்தால் இந்த மமதை பேகம் 42 தொகுதிகளிலும் டிபாசிட் இழந்து படுதோல்வி அடைவார்.

Advertisement