Advertisement

குன்றத்தில் இன்று தேர்தல்: 3.4 லட்சம் பேர் ஓட்டளிக்கின்றனர்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (மே 19) நடக்கிறது. 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.
இங்கு அ.தி,மு.க., தி.மு.க., அ.ம.மு.க., ம.நீ.ம., நாம் தமிழர் உள்ளிட்ட 37 பேர் போட்டியிடுவதால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தொகுதியில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 478 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 533 பேர் ஆண்கள். ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 918 பேர் பெண்கள். மூன்றாம் பாலினத்தவர் 27 பேர்.ஓட்டுப்பதிவிற்காக 1069 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 357 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 357 வி.வி.பேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.பாதுகாப்பு பணியில் 4 கம்பெனி துணை ராணுவத்தினர், 4037 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 297 ஓட்டுச்சவாடிகளில் 88 பதட்டமானவை. அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர் பஞ்சவர்ணம் கூறியதாவது: ஓட்டுச்சாவடிகளில் குடிநீர், மின்வசதி, பாதுகாப்பு, வீல் சேர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 170 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் குறைபாடு ஏற்பட்டால் மாற்றுவதற்காக 30 சதவீத இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. வெளியூர் நபர்கள் தங்கியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement