Advertisement

பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் கேன் தண்ணீர் விற்பனை அமோகம்

மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு பகுதியில் கேன் தண்ணீர் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மூங்கில்துறைப்பட்டில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் தண்ணீர் உப்பாக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் தனியார் கம்பெனி விற்கும் ஆர்.ஓ., வாட்டர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். கடைகளுக்கு தனியார் கம்பெனி ஒரு கேன் விலை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கொடுக்கின்றனர்.கடைகளில் பொதுமக்களுக்கு 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர். இருந்தும் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி மூங்கில்துறைப்பட்டு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் முன்னாள் செயலர் ராமச்சந்திரன் பொதுமக்கள் சேவைக்காக 5 ரூபாய்க்கு ஆர்.ஓ., வாட்டர் வழங்க ஏற்பாடு செய்தார். அதன்பின் ஆர்.ஓ., மிஷின் மெயிண்டனஸ் செலவு அதிகமாகிறது என தற்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்து செய்யப்படுகிறது. இதன் மூலம் வரும் தொகை சங்கத்தில் சேர்க்கப்படுகிறது.மேலும், இங்கு ஒரு லிட்டர் அல்லது இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டில் தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.இதனால், பால் கூட்டுறவு சங்கத்திற்கு தண்ணீர் பிடிக்க அதிகாலை 3:00 மணிக்கே பொதுமக்கள் வந்து வரிசையில் கேன்களை வைத்து காத்து நிற்கின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    சூப்பர்....

Advertisement