Advertisement

நோன்பு காலத்தில் சாப்பிட்ட 80 பேர் கைது

அபுஜா, நைஜீரியாவில் ரமலான் நோன்பு காலத்தில் உணவு உண்ட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சம அளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இஸ்லாமிய சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் விதியை மீறி பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக கூறி 80 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் முதல் முறை கைதானவர்கள் என்பதால் மாலை வரை காவலில் வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இந்நாட்டில் 'ஷரியத்' சட்டத்தை மீறுவோரை கண்டுபிடித்து தண்டிக்க 'ஹிஸ்பா' எனப்படும் போலீஸ் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் விதியை மீறும் இஸ்லாமியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கின்றனர். மற்ற மதத்தினரை தண்டிப்பதில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement