Advertisement

கட்டடத்தில் மோதிய ராணுவ விமானம்

வாஷிங்டன், அமெரிக்காவில் 'எப்-16' போர் விமானம் கட்டடத்தின் மீது மோதிய விபத்தில் விமானி உட்பட 6 பேர் காயத்துடன் தப்பினர்.
தேசிய விமான காவல் படைக்கு சொந்தமான 'எப் -16' ரக போர் விமானம் லாஸ் ஏஞ்சலிலுள்ள விமானப் படை தளத்திலிருந்து புறப்பட்டு சென்றது. வழக்கமான பயிற்சிக்கு பின் கலிபோர்னியா மாகாணம் மோரேனோ பள்ளத்தாக்கில் உள்ள மார்ச் ஏர் ரிசர்வ் தளத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராமல் அப்பகுதியில் இருந்த ஒரு கட்டடத்தின் மீது மோதி தீப்பிடித்தது. இதில் கட்டடத்தில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து மீட்பு படையினரும் உள்ளூர் போலீசாரும் விமானியையும் காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயந்திர பழுதுதான் விபத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement