Advertisement

கர்ப்பத்தில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை லண்டன் டாக்டர்கள் சாதனை

லண்டன், கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் சரிவர வளர்ச்சியடையாத முதுகெலும்பை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சாதனை படைத்துள்ளனர் லண்டன் டாக்டர்கள்.
லண்டனில் உள்ள மேற்கு சாசெக்ஸ் பகுதியில் வசிப்பவர் ஷெர்ரி ஷார்ப் 29. கர்ப்பிணியான இவர் வழக்கமான பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். குழந்தையை 'ஸ்கேன்' செய்து பார்த்த மருத்துவர்கள் ஷெர்ரியிடம் 'குழந்தையின் முதுகெலும்பு சீராக இல்லை. இதனால் முடக்குவாதம் குடல் நோய் கால்களில் உணர்வு இழப்பு மற்றும் சீறுநீரக பிரச்னைகள் ஏற்படும்.
அத்துடன் மற்ற குழந்தைகளைப் போல் நடக்க முடியாது. இதை அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தி விடலாம்' என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து கருவில் இருக்கும் குழந்தைக்கு ஆபரேஷன் செய்து முடித்தனர். ஆபரேஷன் முடிந்து 6 வாரங்களுக்கு பின் ஷெர்ரி பிரசவித்தார். ஜாக்சன் என பெயரிடப்பட்டுள்ள அக்குழந்தை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. பிரிட்டனர் நாட்டில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதன்முறை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement