Advertisement

இந்து இந்தியாவா; இந்துத்வா இந்தியாவா

Share
பாரதத்தில் காலங்காலமாக வாழ்க்கை முறை குறித்த தனித்துவம் நிறைந்த ஒருங்கிணைந்த, புனிதமான பார்வை தொடர்ந்து வருகிறது. காரணம்,அது ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 'உண்மை'க்குபல வடிவங்களும், பல பெயர்களும், அதை அடைவதற்கு பல வழிகளும் உண்டு, என்பதில் பாரதம் நம்பிக்கை வைத்திருக்கிறது.
வழிகள் வெவ்வேறாக இருந்தாலும், அவை அனைத்தும் சமமானவைதான். வேற்றுமை யில் ஒற்றுமை காணும் பாரதத்திற்கு, பல்வேறு அம்சங்களிலும் ஒற்றுமையை நிலைநிறுத்தும் திறமை இருக்கிறது. பாரதம், வேற்றுமையை வேறுபாடுகளாகப் பார்ப்பதில்லை. இந்த ஆன்மிகம், 'ஒவ்வொரு ஆன்மாவும் சக்தி நிறைந்த தெய்வீகம். உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்திலும் ஒரே தெய்வீகத் தன்மை நிறைந்திருக்கிறது. எனவே, நாம் அனைவரும் பரஸ்பரம் இணைந்திருக்கிறோம்' என்று கற்றுத்தருகிறது.


இந்த இணைப்புத்தன்மையை உணர்ந்து கொள்ளுதல், இந்த இணைப்புத்தன்மையை விரிவுபடுத்துதல், அதன் மூலம் இணைந்திருப்பவற்றின் நலனை மேம்படுத்துவதற்கு சேவையாற்றுதல் ஆகியவை, தர்மத்தின் அடிப்படையை உருவாக்குகின்றன. மதத்தில் இருந்து வேறுபட்டதான தர்மம், தனிமைப்படுத்தி பார்ப்பது அல்ல; அது அனைவரையும் உள்ளடக்கி, இணைத்து, நன்மைகளை ஏற்படுத்துகிறது.


வாழ்க்கை முறை குறித்த இந்த பார்வைதான் ஹிந்து பார்வை. ஜாதி, பகுதி, மதம், மொழி போன்றவற்றை மீறி, பாரதத்தில் வாழும் அனைவருக்கும் இந்த வாழ்க்கை பார்வை இருக்கிறது. எனவே, 'ஹிந்துவாக இருத்தல்' அல்லது 'ஹிந்துத்வா' என்பது, அனைத்து மக்களின் அடையாளமாக மாறி அவர்களை ஒற்றுமைப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ்., நிறுவனர், டாக்டர் ஹெட்கேவர், அனைத்து பாரத மக்களிடமும் ஒற்றுமை உணர்வை விழித்தெழ வைக்கவும், துாண்டிவிடவும் இந்த ஹிந்துத்வாவை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்.
ஜாதி, பகுதி, மதம், மொழி வேறுபாடுகளை மீறி அவர்களை பரஸ்பரம் இணைய வைத்தார். இந்த ஹிந்துத்வா நுால் மூலமே, ஒட்டுமொத்த சமூகத்தையும் இணையவைத்து அவர் ஒருங்கிணைக்கத் தொடங்கினார்.


அரசியல் லாபங்களுக்காக...


ஆனால், தங்களது தனிப்பட்ட மற்றும் அரசியல் லாபங்களுக்காக சமூகம் பிளவுபட்டிருப்பதை விரும்பிய சிலர், ஹிந்துத்வாவையும், சங்கத்தையும் 'மதவாதிகள், பிற்போக்கு வாதிகள், பிரிவினைவாதிகள், சிறுபான்மை யினரின் விரோதிகள்' என்றெல்லாம் குறிப்பிட்டு, எதிர்க்க தொடங்கினர்.ஹிந்துத்வாவை முன்னெடுத்துச் சென்ற மாமனிதர்களான சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றோரின் மகத்தான சேவைகளையும், இதே சக்திகள், இதே வகையில் குற்றம்சாட்டி, கண்டித்து,
எதிர்த்து நிராகரித்தனர். ஆனால், ஹிந்துத்வாவின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட சங்கத்தின் சேவைகள், அதன் மீதான எதிர்ப்புகளையும் கெட்ட நோக்கங்களையும் மீறி, தொடர்ந்து வளர்ந்து, விரிவடைந்து கொண்டிருக்கின்றன. இதன்பின் இதே கெட்ட நோக்கம் கொண்ட விமர்சகர்கள், 'ஹிந்துத்வா சரியானதுதான்.ஆனால், மென்மையான ஹிந்துத்வாவுக்கும் கடுமையான ஹிந்துத்வாவுக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சுவாமி விவேகானந்தர் போன்ற ஹிந்துத்வப் பிரச்சாரகர்களின் ஹிந்துத்வா மென்மையானது. ஆனால், ஆர்.எஸ்.எஸ்., பின்பற்றும் கடுமையான ஹிந்துத்வா கண்டனத்துக்குரியது' என்று பேசத் தொடங்கினர்.


அப்படிப்பட்ட எதிர்ப்பாளர்களால், 'நான் ஏன் ஹிந்து இல்லை', 'நான் ஏன் ஹிந்து' என்றெல்லாம் புத்தகங்கள் எழுதப்படுகின்றன. ஆனால், இப்படிப்பட்ட முயற்சிகளையும் மீறி, ஹிந்துத்வா ஏற்பு அதிவேகமாக வளர்ந்துவருகிறது. இதற்கு காரணம், ஹிந்துத்வாதான் பாரதத்தின் ஆன்மா; ஹிந்துத்வாதான், பாரதத்தின் உணர்வு. இதிகாசங்களுடன் போட்டிபோட முயற்சிக்கும் புத்தகங்களால், ஹிந்துத்வாவை எதிர்கொள்ள முடியாது.


உள்நோக்கம் கொண்ட இந்த கும்பல்கள், 'ஹிந்துயிசம் நல்லது. ஆனால், ஹிந்துத்வா தீமையானது' என்று குழப்பத்தை ஏற்படுத்தத் தொடங்கினர். சமீபத்தில், ஒரு ஊடக நிறுவனம் என்னிடம், 'ஹிந்துயிசத்துக்கும் ஹிந்துத்வாவுக்கும் என்ன வித்தியாசம்?' என்று கேள்வி எழுப்பியது. நான் அவர்களிடம், 'இரண்டும் ஒன்றுதான், எந்த வித்தியாசமும் இல்லை' என்று பதிலளித்தேன். ஹிந்துயிசம் என்பது ஆங்கில வார்த்தை; ஹிந்துத்வா என்பது ஹிந்தி வார்த்தை. (அதாவது, குறிப்பிடும் மொழியில்தான் வித்தியாசமே தவிர, குறிப்பிடப்படும் பொருளில் வித்தியாசம் இல்லை)


'ஹிந்துத்வா' என்ற வார்த்தை


டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், 'Hindu View of Life' என்று ஆங்கிலத்தில் ஒரு நுாலை எழுதியிருக்கிறார். அதில், 'Hinduism' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் அந்த நுாலை ஹிந்தியில் எழுதியிருந்தால், 'ஹிந்துத்வா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார். இதுபோல், சாவர்க்கர் ஹிந்தியில் எழுதிய, 'ஹிந்துத்வா' நுாலை ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், 'Hinduism' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார். 'ஹிந்துத்வா' என்ற ஹிந்தி வார்த்தையின் சரியான ஆங்கில மொழிபெயர்ப்பு 'Hinduness' என்று இருக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை.


ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், விக்ஞான் பவனில் நடந்த அவரது, மூன்று நாள் சொற்பொழிவு தொடரின் போது, ஹிந்து மற்றும் ஹிந்துத்வாவின் அர்த்தங்கள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். ஆனால், எதிர்ப்பாளர்கள் அவை பற்றி குறிப்பிட மாட்டார்கள். காரணம், அது அவர்களின் மோசமான உள்நோக்கங்களுக்கு ஏற்றதாக அமையாது.


பாரதம் பற்றிய இருவேறு கருத்துகள் உள்ளன. ஒன்று, பாரதத்தின் புராதன ஆன்மிகப் பாரம்பரியத் தில் வேர் கொண்டிருக்கும் பாரதிய கருத்தாக்கம். மற்றொன்று, அந்நிய அல்லது வெளிநாட்டு கருத்தாக்கம். உண்மையான சித்தாந்தப் போராட்டம் என்பது, இந்த இருவேறு கருத்துகளுக்கு இடையில் தான். பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதி யாக மாறிய ஒருவர், 'இந்த தேர்தலில் ஹிந்து இந்தியா வேண்டுமா? ஹிந்துத்வ இந்தியா வேண்டுமா? என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்' என்று சமீபத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் போன்றவர்கள் ஹிந்து இந்தியாவைப் பற்றி பேசுவதற்கு காரணம், ஹிந்துத்வாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால்தான்.


இது, அவர்கள் ஹிந்து இந்தியாவை 'ஒப்புக்கொண்டு விட்டனர்' என்பதை வெளிப்படுத்தவில்லை;
அவர்கள், தங்களது 'வசதிக்காகவே' இப்படி பேசுகின்றனர் என்பதைத்தான் வெளிப்படுத்து கிறது. ஹிந்துத்வாவால் பாரதம் ஒருங்கிணைந்து ஒற்றுமையாகி வருவதால், ஜாதிரீதியிலான, மதரீதியிலான, பகுதி ரீதியிலான அவர்களது அரசியல் நாள்தோறும் பலவீனமாகி, அவர்களது ஆதரவு அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது.


அவர்களது குறுகியநோக்கிலான அரசியலுக்கு, சமூகத்தைப் பிளவுபடுத்தி வைத்திருப்பது அவசியமாகிறது. ஜாதி, மொழி, மதத்தின் அடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்த முடியவில்லை என்பதால், ஹிந்து - ஹிந்துத்வா என்ற அடிப்படையில் பிளவு படுத்துவோம் என்று புறப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்று, அவர்களின் இந்த வலையில் சிக்கும் அளவுக்கு, சாதாரண மக்கள் முட்டாளாக இருக்கவில்லை. இதனால், அவர்களின் இந்த உரிமைகோரல் உணர்வு மீது கேள்வி எழுப்பப்படுகிறது.


மேலாதிக்க உணர்வுகுழப்பத்தைப் பரப்ப,'ஹிந்துவாதி' அல்லது 'Hinduist' என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளில் கேபிடலிஸம், கம்யூனிஸம், சோஷலிஸம் என்றெல்லாம் சித்தாந்தங்கள் உள்ளன. ஆனால், மேற்கத்திய நாடுகள் போல் பாரதத் தில் இப்படிப்பட்ட, 'இஸம்'களுக்கு இடம் இல்லை. மேற்கத்திய நாடுகளின், 'இஸம்' களில், உலகம் குறித்த தங்களது பார்வையை அடுத்தவர்கள் மீது திணிக்க வேண்டும், வலுக் கட்டாயமாகக்கூட திணித்துவிட வேண்டும் என்ற, மேலாதிக்க உணர்வு இருக்கிறது.


பாரதத்தில், ஹிந்துத்வா (Hinduness) என்பது, ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒருங்கிணைந்த, புனிதமான வாழ்க்கை பார்வை அடிப்படையில் தனிப்பட்ட, குடும்ப ரீதியான, சமூகரீதியான, தொழில்ரீதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற, 'ஹிந்து' என்று அழைக்கப்படுகின்ற மக்களைக் குறிப்பிடுகிறது.

ஆகவே, பிளவுபடுத்தி, குழப்பம் விளைவிக்கும் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தி, அர்ப்பணிப்பு நிறைந்த செயல்கள் மற்றும் நடத்தைகளால் ஹிந்துத்வாவின் நிரந்தர தத்துவத்தையும் மதிப்புகளையும் நிலைநிறுத்தும் கடமைப் பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதன்மூலம், காலங்காலமாக உலகம் அறிந்துள்ள பாரதத் தின் அடையாளம் விரிவடைந்து, சமூகம் மற்றும் தேசிய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பாரதத்தின் புருஷார்த்தம் வெளிப்படும்.


ரவீந்திரநாத் தாகூர் தனது, 'சுதேசி சமாஜ்' கட்டுரையில், 'உண்மையில் நாம் யாரோ அவர் களாக மாற வேண்டும்...' என்று மிகச்சரியாக அறிவுறுத்தியிருக்கிறார்; இதுதான், எல்லாவற்றையும் விட முதலில் நாம் செய்ய வேண்டிய பணி.

- - டாக்டர் மன்மோகன் வைத்யா
அகில பாரத இணை பொதுச்செயலாளர்,

ஆர்.எஸ்.எஸ்.,

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (31)

 • S.kausalya - Chennai,இந்தியா

  கோயில் கர்பகிரகத்தில் நுழைய முடியுமா? Idhenna kelvi ? அந்த இடம் அவர்களின் பரம்பரை வேலை. நாம் Oru நிலத்தில் குத்தகைதாரர்கள் ஆக இருந்தால் வேறு யாரேனும் வந்து நில உரிமையாளரிடம் எனக்கும் உழவு வேலை தெரியும், விவசாயம் படித்து உள்ளேன், enave enakku indha Velai thaarungal என கூறினால் நாம் உடனே பரம்பரையாக நாங்கள் தான் விவசாயம் பார்க்கிறோம் உன்னை விட முடியாது என கூறுவோம் இல்லையா? அதே போல தான் கோயில் பூசாரி வேலையும். அது அவர்களின் வாழ்வாதாரம். பரம்பரை உரிமை. அதை எப்படி அடுத்தவருக்கு விட்டு போவார்கள். வேதம் படித்தவர் கோயிலுக்குள் கற்பகிரகம் போய் சாமியை தொட முடியாது, அதற்கான நியமம் தெரிந்து, அவர் parambarai உரிமையாளராக இருந்தால் மட்டுமே நுழைய முடியும். எல்லோரும் இதையே கேட்கிறீர்கள். அவர் ஜீவனம் அவரவர்களுக்கு. அதில் நாம் ஏன் பங்கு போட வேண்டும்

 • oce - tokyo,ஜப்பான்

  கோவை இளங்கோ மூலவருக்கு அபிஷேக நேரங்களில் கர்ப்ப கிரகத்துள் அனுமதி இல்லை. மற்ற நேரங்களில் ஸ்வாமியை அருகிலிருந்து தரிசிக்கலாம். வாழ்வில் முதலில் மனத்தூயுமை நேர்மை சகிப்பு தன்மை சத்தியம் அமைதி அன்பு இறை சிந்தனை இருந்தால் உங்களிடமே இறைவன் வருவான். .

 • Indian - chennai,இந்தியா

  இந்திய நாட்டில் இந்துத்துவா பற்றி பேசினாலே எதோ துரோகம் செய்பவனை போல் பார்க்கிறார்கள். கேவலம்.

 • S.kausalya - Chennai,இந்தியா

  கிறிஸ்துவில் ஜாதி இல்லையா? யார் சொன்னது? திருமணம் செய்யும் போது, எந்த church., எந்த சபை என்றெல்லாம் பார்த்து தான் திருமணம் செய்கிறார்கள். அதே போல் தான் இஸ்லாமியரும். தமிழ் இஸ்லாமியரை உருது பேசும் இசுலாமியர் திருமணம் செய்ய மாட்டார்கள். ஆனால் அதுவே இப்போதுஇந்து இனத்தவர் எல்லாம் பொருளாதாரம்.சார்ந்து திருமணம்செய்ய முன் வந்துள்ளனர். எதோ இந்து மதத்தில் தான் ஜாதி பேச்சு என்றெல்லாம் இல்லை.

 • Elango - Kovai,இந்தியா

  நான் ஒரு ஹிந்து. பிராமண அல்ல. புலால் உண்பதில்லை. திருமறை, திருவாசகம் தெரியும். தினமும் இருவேளை பூஜை செய்கிறேன். தனியார் வேலை செய்கிறேன். நான் கோவில் கரபாகிரஹத்தில் நுழைய முடியுமா??

Advertisement