Advertisement

அரசியல் களத்துக்கு வரும் வைகோவின் வாரிசு!

''பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்துட்டாரு பா...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார், அன்வர்பாய்.


''யாருவே...'' என விசாரித்தார்,அண்ணாச்சி.

''முதல்வர், இ.பி.எஸ்., தான்... திருப்பரங்குன்றம் தொகுதியில, இரண்டாம் கட்ட பிரசாரத்துக்காக, போன, 10ம் தேதி ராத்திரி வந்தவர், ரெண்டு நாள் மதுரையில தங்கினார்... 12ம் தேதி காலையில கிளம்பி, ஒட்டப்பிடாரம் போனாரு பா...


''அன்னைக்கு தான், அவருக்கு பிறந்த நாள்... இதுக்காக, அவர் தங்கியிருந்த ஓட்டல்ல, கட்சி நிர்வாகிகள், 40 கிலோவுல பிரமாண்ட கேக் தயார் பண்ணியிருந்தாங்க பா...


''ஆனா, கேக் வெட்டுறதை தவிர்த்த முதல்வர், 'என் பிரசார செய்தி தான் பத்திரிகைகள்ல வரணும்... பிறந்த நாள் கொண்டாடுனா, அதுவே, முக்கிய செய்தியாகிடும்'னு மறுத்துட்டாராம் பா...'' என்றார் அன்வர்பாய்.


''எப்படா, 28ம் தேதி வரும்னு இருக்கா ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்கு சென்றார், குப்பண்ணா.


''அன்னிக்கு என்னங்ணா ஸ்பெஷல்...'' எனக் கேட்டார், கோவை, கோவாலு.

''வருஷா வருஷம், கோடை காலமான, ஏப்ரல், மே மாசங்கள்ல, அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு இடமாறுதல் போடுவா... அப்ப தான், புது இடங்களுக்கு போய், குழந்தைகளை, ஸ்கூல், காலேஜ்ல சேர்க்க முடியும்கறதுக்காக இந்த ஏற்பாடு ஓய்...


''இந்த வருஷம் தேர்தல் வந்துட்டதால, யாருக்கும் இடமாறுதல் போடலை... 27ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தப்பறம் தான், இடமாறுதல் போடுவாளாம்... அதுக்கு அடுத்த ஒரு வாரத்துல, ஸ்கூல்கள் எல்லாம் திறந்துடும்கறதால, அரசு ஊழியர்கள் எல்லாம், எப்படா, 28ம் தேதி வரும்னு காத்துண்டு இருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''உதயநிதி மாதிரியே, தீவிர அரசியல்ல இறங்க போறாராமுல்லா...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், பெரியசாமிஅண்ணாச்சி.


''யாரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''வைகோ மகன், துரை வையாபுரிக்கும் அரசியல் ஆசை வந்துட்டாம்... ம.தி.மு.க., நிர்வாகிகள் வீட்டு நிகழ்ச்சிகள்ல, கூட்டணி தலைவர்களை, வைகோ சந்திக்கிற நிகழ்ச்சிகள்ல, தலையை காட்டுதாரு வே...


''சமீபத்துல ஒரு நிகழ்ச்சிக்கு போன வையாபுரிக்கு, 'மிக விரைவில், தமிழகத்தை காக்க, இளைய புயல் களமாட வருகிறது... பகையே ஓடி ஒளிந்து விடு... நீங்கள் சுட்டு விரல் காட்டும்திசையில், களமாட காத்திருக்கிறோம்... வாருங்கள் தலைவா... வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம்'னு, போஸ்டர் ஒட்டி, வரவேற்பு குடுத்திருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.


''சரி... பிற்காலத்துல, உதயநிதிக்கு ஒத்தாசையா இருப்பார் ஓய்...'' என்றார்குப்பண்ணா.


''ஆனாலும், இவ்வளவு எகத்தாளம் உங்களுக்கு ஆகாதுங்ணா...'' என, சிரித்தபடியே கோபால் எழ,மற்றவர்களும்கிளம்பினர்.

டி.ஆர்.ஓ., போல வலம் வரும் தாலுகா அதிகாரி!''இனிமே, புரட்சி அரசின்னு தான் கூப்பிடணும்னு, கட்சிக்காரங்களுக்கு உத்தரவு போட்டிருக்காவ வே...'' என, பெஞ்ச் அரட்டையை ஆரம்பித்தார், பெரியசாமி
அண்ணாச்சி.


''யாரு... தமிழிசையா ஓய்...'' என, குத்து மதிப்பாக கேட்டார், குப்பண்ணா.


''இது, விஜயகாந்த் கட்சி விவகாரம்... 'பிரேமலதாவை அண்ணியார், தென்னகத்து ஜான்சிராணின்னு கூப்பிடணும்'னு, கட்சிக்காரங்களுக்கு ஏற்கனவே உத்தரவு போட்டு இருந்தாவ வே...


''இப்ப, புரட்சி அரசின்னு கூப்பிடணும்னு உத்தரவு போட்டிருக்காவ... அதே மாதிரி, விஜயகாந்த் மூத்த மகன், விஜய பிரபாகரனை, சின்ன கேப்டன்னு கூப்பிடணுமாம்... சினிமாவுல நடிக்கிற, இளைய மகன் சண்முக பாண்டியனை, இளைய புரட்சி கலைஞர்னு கூப்பிடணும்னு, உத்தரவு மேல உத்தரவுகளா போட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.


''இப்படில்லாம் கட்சிக்காராளை, 'டார்ச்சர்' செஞ்சா, இருக்கறவாளும் ஓடிடப் போறா...'' என்ற குப்பண்ணா, ''செலவு பண்ண அனுப்பிச்சவர், செலவு வச்சிட்டு போயிட்டார் ஓய்...'' என, அடுத்த விஷயத்திற்கு தாவினார்.


''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''நாலு தொகுதியில, இன்னிக்கு இடைத்தேர்தல் நடக்கறதோல்லியோ... சூலுார் தொகுதி, காமாட்சிபுரம் பகுதியில, மூணு வார்டுகளுக்கு பொறுப்பாளரா, தி.மு.க., இளைஞர் அணி மாநில துணை செயலர், சுபா சந்திரசேகர்னு ஒருத்தரை, தலைமை அனுப்பிச்சது ஓய்...


''மூணு வார்டுகள்லயும், 4,707 ஓட்டுகள் இருக்கு... அந்த பகுதியில பிரசார செலவு, கட்சியினர் போக்குவரத்து செலவுகளை பார்த்துக்கணும்னு, தலைமை உத்தரவு போட்டது ஓய்...


''இவரோ, அங்க போய், கட்சி நிர்வாகிகளிடம், ஊர்வலம், பிரசாரம், சாப்பாடு செலவுன்னு தினமும் பணம் வாங்கியிருக்கார்... கூடவே, 10 பேரை கூட்டிண்டு போய், அவா செலவுகளையும், கட்சிக்காரா தலையில கட்டிட்டாராம்... ஒரு வழியா, பிரசாரம் முடிஞ்சு, முந்தா நாள் அவர் கிளம்பி போனதும் தான், கட்சிக்காராள்லாம் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.


''டி.ஆர்.ஓ., மாதிரி வலம் வந்துட்டு இருக்காருங்க...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார், அந்தோணிசாமி.


''எந்த ஊர் அதிகாரியை சொல்றீங்ணா...'' எனக் கேட்டார் கோவை, கோவாலு.


''சென்னையை ஒட்டியிருக்கிற தாலுகாவுல, அதிகாரியா இருக்கிறவரை தான் சொல்றேன்... இந்த தாலுகா, தொழிற்சாலைகள் நிறைந்த இடமா இருக்கிறதால, பல வழிகள்லயும், அதிகாரிக்கு, 'கட்டிங்' வந்துட்டு இருக்குங்க...


''நிறைய புறம்போக்கு நிலங்களை, வித்துட்டு இருக்கார்... இதுக்கு, வி.ஏ.ஓ.,க்கள் சிலரும் துணையா இருக்காங்க... தாலுகா அலுவலக செலவுகளை இவரே செய்றதால, பெண் அதிகாரியும், இவரை கண்டுக்க மாட்டேங்கிறாங்க... இதனால, டி.ஆர்.ஓ., மாதிரி, பந்தாவா கார்ல வலம் வந்துட்டு இருக்காருங்க...'' என,முடித்தார் அந்தோணிசாமி .

''பூபாலன் வரார்... சுக்கு காபி போடும் நாயர்...'' என்றபடியே குப்பண்ணா எழ,மற்றவர்களும் நடையை கட்டினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Avarpanguku sterlite sambaathithamaathiri ivarukku veru ethenum company kidaikumaa

  • R. SUBRAMANIAN -

    களவாட என்பதற்கு பதில் களமாட என்று போஸ்டரில் இருக்கும் அச்சுப்பிழை குறித்து வருந்துகிறோம்-மதிமுக நிர்வாகிகள்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அடுத்த தலைமுறை முதல்வருக்கு பிரசார ‘பீரங்கி’ தயார் தேர்தலில் செலவழித்து தலையில் துண்டைப் போட்டவர்களிடையே இப்படி கில்லாடிகள் எத்தனை பேரோ ?

Advertisement