Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

நாவல் மருத்துவம்



நாவல் பழம் மட்டுமின்றி பட்டை, விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. இவ்வாறு ஒரு தாவரத்தின் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவக் குணம் கொண்டுள்ளதை இயற்கை மருத்துவத்தில் 'சமூலம்' என்பர். பழமும், பழத்தை காய வைத்து அரைத்த பொடியும் சர்க்கரை நோய்க்கு பரிந்துரை செய்யப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கினை நாவல் பழங்கள் கட்டுப்படுத்துகின்றன. நாவல் பழத்தில் கால்சியம், இரும்புச்சத்து அதிகமுள்ளதால் ஆஸ்டியோபோரோசிஸ், ரத்த சோகைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.


தகவல் சுரங்கம்

பெரும்பான்மை கிடைக்குமா



பதினேழாவது லோக்சபா தேர்தல் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் 8,049 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மே 23ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது தெரிந்து விடும். இதற்கு முன் நடந்த 16 லோக்சபா தேர்தல்களில், ஒன்பது தேர்தல்களில் மட்டும் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி
அமைத்தது. இதில் அதிகபட்சமாக காங்., ஏழு முறை பெரும்பான்மை பெற்றது. பாரதிய லோக்
தளம் மற்றும் பா.ஜ., ஆகியவை ஒருமுறை பெரும்பான்மை பெற்றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement