Advertisement

அடக்கி வாசித்தது ஏன்?

'மூத்த அமைச்சர்களே, பிரதமரை பார்த்து பயந்து நடுங்குவது, ஆச்சரியமாகத் தான் இருக்கிறது' என, வெளியுறவு அமைச்சர், சுஷ்மாவை பற்றி முணுமுணுக்கின்றனர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள்.தன் அமைச்சகம் செய்துள்ள பணிகள் குறித்து, உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிடுவது, சுஷ்மாவின் வழக்கம். மும்பை தாக்குதல் உட்பட, நம் நாட்டில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட அண்டை நாடான, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி, ஹபீஸ் சயீது, ஐ.நா.,வால், சர்வதேச பயங்கரவாதியாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்டான்.இதற்கு பெரும் பங்கு வகித்தது, வெளியுறவு அமைச்சகம் தான். ஆனால், சுஷ்மா இது பற்றிய செய்தி எதையும், தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை மட்டும் பகிர்ந்து விட்டு, அமைதியாகி விட்டார்.சாதாரண விஷயத்தை கூட, சமூக வலைதளத்தில் பதிவிடும் சுஷ்மா, இந்த விஷயத்தில் அடக்கி வாசித்தது குறித்து விசாரித்த போது தான், உண்மை தெரிந்தது.'ஹபீஸ் சயீது, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டதற்கான பெருமை, பிரதமர் மோடிக்கு கிடைக்க வேண்டும் என நினைத்து உள்ளார், சுஷ்மா. இந்த விஷயத்தில், தாமாக கருத்து தெரிவித்து, சிக்கலில் மாட்ட வேண்டாம் என்பதால் தான், சுஷ்மா அடக்கி வாசித்தார்' என்கின்றனர், வெளியுறவு அமைச்சக அதிகாரிகள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement