Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அலை மின்சாரம்


இன்றைய தொழில்நுட்ப உலகில் மின்சாரம் அவசிய தேவையாக உள்ளது. அனைத்து தொழில் நுட்பங்களும் மின்சாரத்தில் தான் இயங்குகின்றன. இந்தியாவில் கடல் அலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையைப் பரவலாக்க வேண்டும். இது நார்வே, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளன. கடல் அலைகளின் வேகமே, மின்சார தயாரிப்பில் முக்கிய காரணியாக உள்ளது. கடல் அலைகளில் பல வகைகள் உள்ளன. புவிஈர்ப்பு விசையால் தோன்றும் பூத அலைகளில் இருந்தே, அதிகளவில் மின்சாரம் தயாரிக்க முடியும்.




தகவல் சுரங்கம்

உலக தொழில்நுட்ப தினம்



சர்வதேச தொலைத்தொடர்பு அமைப்பு துவக்கப்பட்ட தினம், ஐ.நா., சார்பில் தொலைத்தொடர்பு தினமாக, 1969 முதல் மே 17ல் கடைப்பிடிக்கப்படுகிறது. நவீன உலகில் தொலைத்தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது. உலகையே கைக்குள் கொண்டுவரும் 'இன்டர்நெட்' பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. அனைவருக்கும் தகவல் தொழில்நுட்ப வசதி கிடைக்க வேண்டியது அவசியம் என ஐ.நா., அறிவுறுத்துகிறது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் வாழும் பெண்களையும் சென்று சேரும் வகையில் தகவல் தொழில்நுட்பங்கள் வளர வேண்டும் என்பது ஐ.நா.,வின் விருப்பம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement