dinamalar telegram
Advertisement

வன்முறை எதிரொலி; மேற்கு வங்கத்தில் இன்றுடன் பிரசாரம் ஓய்வு

Share
கோல்கட்டா : கோல்கட்டா வன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் ஒருநாள் முன்னதாக, இன்று (மே 16) தேர்தல் பிரசாரம் ஓய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தலில் 7வது மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு மே 19 ஆம் தேதி நடக்க உள்ளது. கோல்கட்டாவில் டம் டம், பாரசாத், பசிர்ஹாட், ஜெய்நகர், மதுராப்பூர், ஜாதவ்பூர், டைமண்ட் ஹார்பர், தெற்கு மற்றும் வடக்கு கோல்கட்டா ஆகிய 9 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பா.ஜ தேசிய தலைவர் அமித் ஷா நேற்று ( மே 14) கோல்கட்டாவில் சாலை பிரசாரம் மேற்கொண்டார்.

பேரணியின் போது, சாலையில் இருந்த திரிணமுல் கட்சியை சேர்ந்த சிலர், பா.ஜ.,வுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் திரிணமுல் மற்றும் பா.ஜவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பலர் கற்களை வீசுவது, வாகனங்களுக்கு தீவைப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். போலீசார் பலரை கைது செய்தனர். இந்த வன்முறையால் கோல்கட்டாவில் பதற்றம் நிலவியது.

இந்நிலையில் வன்முறை சம்பவத்தின் எதிரொலியாக இன்றுடன்(மே 16) மேற்கு வங்கத்தில் பிரசாரம் ஓயும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆணையம் கூறியிருப்பதாவது : 7ம் கட்ட தேர்தல் பிரசாரம் மே 17 உடன் முடிவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கோல்கட்டாவில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்தில் நிகழ்ந்த வன்முறையால் ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தை முடிக்க வேண்டும். மேற்குவங்கத்தில் இன்று ( மே 16 ) இரவு 10 மணியுடன் பிரசாரம் முடிவடைகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement