dinamalar telegram
Advertisement

சரித்திர உண்மை: கமல் மீண்டும் கருத்து

Share
தோப்பூர் : 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என நான் கூறியது சரித்திர உண்மை' என, மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி தோப்பூரில் பிரசாரத்தில் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், நான் அரவக்குறிச்சியில் பேசியதற்கு கோபப்படுகிறார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. அதை நான் ஒருமுறை தான் கூறினேன். ஆனால் ஊடகங்கள் 200 முறைக்கு மேல் சொல்லி விட்டார்கள்.

அரவக்குறிச்சியில் நான் பேசியதை சரியாக கேட்காமல் நான் கலகத்தை விளைவிக்கிறேன் என என் உள்மனதை புண்படுத்துகிறார்கள். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்துக்கள். அவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் நான் பேசமாட்டேன்.

என்னை நான் தலைவராக பார்த்துக் கொண்டதே இல்லை. என்னை பல இடங்களில் கையெடுத்து கும்பிடுகிறார்கள். சில இடங்களில் அவமானப்படுகிறார்கள். அரவக்குறிச்சியில் நான் பேசியதை முழுவதுமாக கேட்காமல் என்னை குற்றம்சாட்டுகிறார்கள். உண்மை கசக்கத்தான் செய்யும். அந்த கசப்பு மருந்தாக மாறும்.

குற்றம் சொல்வதற்கும் ஒரு அளவு வேண்டாமா? நம்புவது போல் குற்றம்சாட்டுங்கள். என் மீது நடவடிக்கை எடுக்க பல வழக்குகளைப் பதிவு செய்கிறார்கள். அது ஊடக நண்பர்களுக்கம் பொருந்தும்.

மதச் செருக்கு, ஜாதி செருக்கு எங்கும் எடுபடாது. உண்மையே வெல்லும். தீவிரவாதி என்று தான் சொன்னேன். பயங்கரவாதி என்றோ, கொலைகாரன் என்றோ நான் சொல்லவில்லை. நான் தீவிர அரசியலில் இறங்கி உள்ளேன். எனக்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறுகினேன். பிரிவினை பேச மாட்டோம்.

என்னை அவமானப்படுத்த எனது கொள்கையை கையில் எடுத்தால் தோற்றுப் போவீர்கள். எனது கொள்கை நேர்மை. இது போன்ற விளையாட்டுக்கள் என்னிடம் வேண்டாம். இது அறிவுரை தான். இந்த அரசு வீழ்த்தப்பட வேண்டும், ஜனநாயக முறைப்படி வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்பதையும் சர்ச்சை ஆக்காதீர்கள்.

எந்த ஜாதியை பற்றியும், மதத்தை பற்றியும் விமர்சித்து பேசுவேன். இவர்கள் என் மக்கள் என்பதால் அந்த உரிமையில் பேசுவேன். நான பேசியதால் யார் மனதும் புண்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

கமல் பிரசாரம் திடீர் ரத்து:இந்நிலையில், திருப்பரங்குன்றத்தில் மேற்கொண்ட பிரசாரத்தை, கமல் பாதியில் ரத்து செய்தார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு தோப்பூரில் மட்டுமே பிரசாரம் செய்த கமல். சாமநத்தம், பனையூர் மற்றும் வில்லாபுரத்தில், நடைபெறவிருந்த பிரசாரத்தை ரத்து செய்து, ஓட்டலுக்கு திரும்பினார்.

முன்ஜாமின் கோரி மனு தாக்கல்:சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து என கமல் பேசியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி, கமல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது நாளை(மே 16) விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (129)

 • Narayan -

  கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல?

 • Sathyanarayanan Sathyasekaren -

  Request to the Hindus in his party, if you are eating with salt, throw this guy out.

 • PANDA PANDI - Aththipatti,இந்தியா

  கோட்ஸே யாரு. அவரு ரொம்ப நல்லவரா நாட்டுக்காக உயிர் தியாகம் பண்ணினவரா. அரசியல் வித்தகரோ. பலே கில்லாடியிருப்பாரு போல. தூக்கில் போட்டாங்கலாமா. ஏன். ஓஓ நம்ம FATHER OF NATION காந்தியை சுட்ட பாவியா இவரு. இப்போ புரிந்துவிட்டது. கோட்ஸேவை ஆதரிப்பவர்களா நம்ம CHOWKIDARS தமிழ்இசையும். ஏச்சு ராஸா பொன்னர், கணேசன். காவலாளின்னு சொன்னீங்க. இப்போ கில்லர் of FATHER OF NATION ஆதரவு சொல்ரீங்க. அப்போ யார் தேசத்திரோகிகள் சொல்லுங்க.

 • ஸ்ரீனி, COIMBATORE -

  காந்தியைக் கொன்ற கோட்சேவைத் தீவிரவாதி என்று சொன்னால் எதிர்ப்பு கிளம்பும் ஒரே ஆட்சி இதுதான்..!! பாவம்தான் கமல்

 • Vasanth - Chennai,இந்தியா

  இந்திய சரித்திர உண்மைகள் ஒருபுறம் இருக்கட்டும். இவரின் இந்து துவேஷ சரித்திர உண்மைகளை காணுங்கள். youtube'ல் சாணக்யா சானலில் "ஹிந்து மதத்தை கமல் குறிவைப்பது ஏன்?" என்ற கானொளியினை முழுமையாய் காணுங்கள்.

  மேலும் செய்திகள் :

Advertisement