Advertisement

டாஸ்மாக் கடைக்கு எதிராக மறியல் போராட்டம்

விருதுநகர்:விருதுநகர் வி.வி.ஆர்.,காலனி அருகே அமைந்திருக்கும் புதிய டாஸ்மாக்கை அகற்ற கோரி அல்லம்பட்டி மக்கள் சாலை மறியல் செய்தனர்.
விருதுநகர் அல்லம்பட்டியில் வி.வி.ஆர்.,காலனி, பாரதிநகர், மேட்டுத்தெரு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளது. முக்கியப் பகுதியான வி.வி.ஆர்.,காலனி ரோட்டின் எதிர்ப்புறத்தில் உள்ள ஒரு வீட்டில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் குடியிருப்போர் சிரமப்படுகின்றனர். இந்த டாஸ்மாக் கடை ஏற்கனவே அல்லம்பட்டி காமராசர் சிலைக்கு பின் இயங்கி வந்தது. பொதுமக்களின் தொடர் வற்புறுத்தலின் பேரில் இடம் மாற்றப்பட்டது. தற்போது அதே டாஸ்மாக்கை குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் மாற்றியது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று மாலை அல்லம்பட்டி- குல்லுார்சந்தை ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். கிழக்கு போலீசார் சமரசம் செய்து வைத்தப்பின் கலைந்து சென்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement