dinamalar telegram
Advertisement

மா விளைச்சல் சரிவு விலையில் உயர்வு

Share
Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மா விளைச்சல் சரிவடைந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், எதிர்பார்த்த பருவ மழை பொழியவில்லை. இதனால், நெல், காய், பழம் உள்ளிட்டவற்றின் விவசாயம், போதிய நீரின்றி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உள்ளூர் மா விளைச்சல் சரிவால், அதன் விலை உயர்ந்துள்ளது.


இது குறித்து, மாம்பழ வியாபாரி, எஸ்.தபரேஷ் கூறியதாவது:ஆண்டுதோறும், வேடல் பகுதியில் உள்ள தோப்பை குத்தகைக்கு எடுத்து, மாம்பழ வியாபாரம் செய்கிறோம். கடந்த ஆண்டை காட்டிலும், 80 சதவீத மாம்பழம் விளைச்சல், தற்போது குறைந்து விட்டது.இருந்த காய்கள், சமீபத்தில் வீசிய காற்றில் கொட்டி விட்டன. இதனால், பழம் விலை அதிகரித்துள்ளது.



மா மரத்தோப்புகளில், மொத்த விலைக்கு, கிலோ பங்கனபள்ளி, 65; அல்போன்சா, 60; செந்துாரா - 45 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பங்கனபள்ளி, சில்லரை விலையில், 80 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.இயற்கையான முறையில் பழுக்க வைத்து, மாம்பழங்களை விற்பனை செய்கிறோம். நாங்கள் விளைவித்த மாம்பழங்களை, வாகன ஓட்டிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement