dinamalar telegram
Advertisement

கமுதி தாலுகா அலுவலகத்தில் 680 விண்ணப்பங்கள் தேக்கம்

Share
சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு
கமுதி:கமுதி தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார்கள் பற்றாக்குறையால் 680 விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதால், சான்றிதழ்கள் பெற முடியாத மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கமுதி தாலுகா அலுவலகத்தில்260 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்குஜாதி, வருமானம், வாரிசு, இருப்பிடம், முதல் பட்டதாரி சான்றிதழ்கள், அரசு நலத்திட்ட உதவிகளில் பயன்பெறும் பயனாளிகளுக்கான சான்றுகள் வழங்கப்படுகிறது.மூன்றுமாதமாக கமுதி தாலுகா அலுவலகத்தில் வடக்கு, தெற்கு பிர்காக்களில் பணியாற்றும் துணை தாசில்தார்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் ஆதி திராவிடர்மாணவர்கள், மற்றவர்களுக்கு சான்றிதழ்வழங்கும் துணை தாசில்தார்கள் பற்றாக்குறையால், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க முடியாமல், 680 விண்ணப்பங்கள் தேங்கியுள்ளது.இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர்ந்து படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் அரசின் இட ஒதுக்கீட்டில் பயன்பெற மே 18, கடைசி தேதியாக தமிழக அரசு அறிவித்துள்ளதால், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. ஆகவே மாணவர்கள் மேல்நிலை படிப்பைதொடரும்வகையில், கமுதி தாலுகா அலுவலகத்தில் பற்றாக்குறையாக உள்ள துணை தாசில்தார் பணியிடங்களை நிரப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement