dinamalar telegram
Advertisement

ரூ.12 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிக்கியது

Share
Tamil News
சென்னை:சார்ஜா மற்றும் கொழும்புவில் இருந்து கடத்தி வரப்பட்ட, 12.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தங்கக் கட்டிகளை, சுங்கத் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு எமிரெடஸ் நாடுகளில் ஒன்றான, சார்ஜாவில் இருந்து, 'ஏர் - இந்தியா' விமானம், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சென்னை வந்தது.


@@அதில் வந்த, மதுரையைச் சேர்ந்த வசந்த் ஜெயராஜ், 25, என்பவனை, சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்ததில், அவனிடம் இருந்த, 'ப்ளூடூத் ஸ்பீக்கர், ஹெயர் டையர்' ஆகிய பொருட்களில், 7.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 232 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைபோல், இலங்கை தலைவர் கொழும்புவில் இருந்து, 'ஏர் - இந்தியா' விமானம் நேற்று மாலை, 6:25 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த, இலங்கையைச் சேர்ந்த பாத்திமா, 43, என்பவளிடம் சோதனை யிட்டதில், அவளது ஆசனவாயில் இருந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 154 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கக்கட்டிகள் கடத்திய இருவரையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement