Advertisement

800 கிலோ மண் புழு கடத்திய இருவர் சிக்கினர்

கும்மிடிப்பூண்டி:கார் மூலம், எண்ணுாரில் இருந்து, நெல்லுாருக்கு கடத்திய, 800 கிலோ, சிவப்பு நிற கடல் மண் புழுக்களை, போலீசார் பறிமுதல் செய்து, கடத்திய இருவரை கைது செய்தனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், நேற்று, ஆரம்பாக்கம் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது, ஆந்திரா நோக்கி சென்ற, இனோவா காரை நிறுத்தி சோதனையிட்டதில், 20 பெரிய பைகள் இருந்தன.ஒவ்வொரு பைகளிலும், தண்ணீருடன், சிவப்பு நிற மண் புழுக்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தன.எண்ணுாரில் இருந்து, ஆந்திர மாநிலம், நெல்லுாருக்கு, இறால் பண்ணை பயன்பாட்டிற்காக, 800 கிலோ மண் புழுக்களை கடத்தியது தெரிய வந்தது.

கடத்திய, மெதிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், 33, எளாவூர் கிராமத்தைச் சேர்ந்த சசி, 22, ஆகிய இருவரை கைது செய்தனர்.பறிமுதல் செய்த மண் புழுக்கள், கார் மற்றும் கைது செய்த இருவரையும், கும்மிடிப்பூண்டி வன சரகர் மாணிக்கவாசகத்திடம், ஆரம்பாக்கம் போலீசார் ஒப்படைத்தனர்.பல்லுயிர் பெருக்க சட்டம் - 2002ன் கீழ், கும்மிடிப்பூண்டி வன சரகத்தினர், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement