Advertisement

முதியவருக்கு 1௦ ஆண்டுகள் சிறை

சென்னை:நான்கு வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த, ௭௫ வயது முதியவருக்கு, 10ஆண்டு சிறை தண்டனை விதித்து, சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்தவர், ஜெய்லாப்தீன், 75; இவரது வீட்டில் வாடகைக்கு இருந்தவரின், நான்கு வயது சிறுமியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, அண்ணாநகர் போலீசார் ஜெய்லாப்தீனை, கைது செய்தனர்.



2018 ம் ஆண்டு, சம்பவம் நடந்தது. இவ்வழக்கில், சென்னை மகளிர் நீதிமன்றத்தில், இன்ஸ்பெக்டர், தனலட்சுமி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.நீதிபதி மஞ்சுளா, வழக்கை விசாரித்தார். போலீஸ் தரப்பில், சிறப்பு வழக்கறிஞர், ஸ்ரீலேகா வாதாடினார். ஜெய்லாப்தீனுக்கு, 10ஆண்டு சிறை, 5,000ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு அளித்தார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement