Advertisement

யாருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி? எதிர்பார்ப்பில் ஸ்டாலின், வைகோ வாரிசுகள்

ஜூலை மாதம் நடைபெறவுள்ள, ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகளுக்கு, புதிய எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க.,வில், யார் யாருக்கு பதவி கிடைக்கும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அ.தி.மு.க.,வை சேர்ந்த, டாக்டர் மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல்; தி.மு.க.,வை சேர்ந்த கனிமொழி; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த, டி.ராஜா ஆகிய, ஆறு பேரின் ராஜ்யசபா எம்.பி., பதவிக்காலம், ஜூலை, 24ல், முடிவடைகிறது. தற்போதைய, எம்.எல்.ஏ.,க்கள் நிலவரப்படி, அ.தி.மு.க.,வுக்கு, மூன்று எம்.பி.,க்களும், தி.மு.க.,விற்கு, இரண்டு எம்.பி.,க்களும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால், இடைத்தேர்தலை சந்திக்கும், 22 சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்த பின், ஆறாவது எம்.பி., பதவியை, யார் கைப்பற்றுவர் என்பதற்கு விடை கிடைக்கும். இடைத்தேர்தலில், தி.மு.க., ஐந்து தொகுதிகளில், வெற்றி பெற்றால், ஆறாவது எம்.பி., பதவி, அக்கட்சிக்கே கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. எப்படி என்றால், தற்போது தி.மு.க.,- காங்கிரஸ், முஸ்லிம் லீக் கூட்டணிக்கு, 97 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய, 34 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. இந்த கணக்கில், தி.மு.க.,விடம், 97 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், அக்கட்சிக்கு, இரண்டு எம்.பி.,க்களை தேர்வு செய்ய, 68 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுக்கள் போதும். மீதம், 29 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இடைத்தேர்தலில், ஐந்து தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற்றால், 34 எம்.எல்.ஏ.,க்கள் பலம் கிடைத்து விடும். அந்த சூழல் வந்தால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், தலா, மூன்று எம்.பி.,க்களை தேர்வு செய்ய முடியும்.

லோக்சபா தேர்தலின் போது, அ.தி.மு.க., அணியில், பா.ம.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில், பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி வெற்றி பெற்றால், அவரது மனைவி சவுமியாவுக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்கலாம். அதேசமயம், அன்புமணி தோல்வி அடைந்தால், அவருக்கு தான், ராஜ்யசபா எம்.பி., பதவி போகும் என, அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அ.தி.மு.க.,வில், மைத்ரேயன், தளவாய்சுந்தரம், கோகுலஇந்திரா, வைகைச்செல்வன் போன்றவர்களின் பெயர்கள், பரிசீலனையில் உள்ளன. ஒருவேளை, கரூர் தொகுதியில், தம்பிதுரை தோல்வி அடைந்தால், அவரும் ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்பார். லோக்சபா தேர்தலில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காத, 'சிட்டிங்' எம்.பி.,க்கள் சிலரும், ராஜ்யசபா தேர்தலுக்காக காத்திருக்கின்றனர்.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுடன், அவரது மகன் உதயநிதியும், தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுப்பட்டார். எனவே, உதயநிதிக்கு எம்.பி., பதவி கிடைக்கலாம் என்றும், அவர் மறுத்து விட்டால், ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு கிடைக்கலாம் என்றும், அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு, ஒரு ராஜ்யசபா, 'சீட்' தருவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ,எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது.அதை, அவர் விரும்பவில்லை என்றால், அவரது மகன், துரை வையாபுரிக்கு, அந்த பதவி கிடைக்கலாம் என தெரிகிறது. சமீப காலமாக, அக்கட்சியில், துரை வையாபுரி முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார்.

இப்படி சில கட்சிகளில், தலைவர்களின் வாரிசுகளும், குடும்பத்தினரும், ராஜ்யசபா எம்.பி., பதவியை விரும்புகின்றனர்.அதேபோல், கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளும் விரும்புகின்றனர். இவர்களில், யாருக்கு, கட்சிகளின் தலைமை, பதவி தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

- நமது நிருபர் -
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • Jaya Ram - madurai,இந்தியா

  நிச்சயம் உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கணும் ஏனென்றால் கட்சிவிதிமுறைப்படி தலைவரின் பிள்ளை ஒன்னு எம்பி அல்லது எம் எல் ஏ அல்லது மந்திரியாக இருந்தாக வேண்டும் என்பது கட்டாய விதியாகும் அதன்படி ஸ்டாலின் , அழகிரி , கனிமொழி ஆகியோர் பதவி பெற்றுள்ளனர்

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  முக மூணாம்கிளாஸ் எம்ஜிஆர் ஸ்கூல் போகலே ஜெயா வெறும் மெட்ரிக் (டிகிரி வாங்களே )EPS வக்கீலாமா?????/ஆப்ஸ் B ஏ மத்தமந்திரிகளெல்லாம் எவ்ளோன்னு தெரியலே தினகரன் எம்பீ ஏ வாமா?/படிச்சிகளையே இல்லே வடக்கேதான் சொல்லுவாங்க நாலுப்பிள்ளை லேஒருபிள்ளைக்கு படிப்பு ஏறாது அதனால் அவனுக்கு அரசியல்தான் ஓகே என்று அதுபோல தமிழ்நாட்டுலே அரசியவியாதியின் வாரிசுகளெல்லாம் சுலபமா எம் எல் ஏ /எம் பி ஆயிட்டு பெர்மெனெண்டா வருவாய்க்கு வழிதேடிடுறானுகப்போல கூடவே பழகுண்டாஸ்க்ளைவச்சுண்டால் போதுமே

 • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

  அடியே என்பதற்கு அகமுடையாளை காணோம் அதற்குள் பையன் பெயர் என்ன வைக்கலாம் என்று ஒரு கூட்டம் திட்டம் போடுது

 • Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

  ராஜ்ய சபா என்பதை மாற்றி கிழ அரசியல்வியாதிகளின் குடும்ப னால சபா என அழைக்கலாம்.. எல்லாவனும் காலம்போன காலத்துல புள்ள / பேரன் / பேத்தி / பொண்டாட்டி இதுகளை எம்பி ஆக்குறானுவ.. அது ராஜ்யசபா இல்லை.. இத்துப்போன அரசியல் வியாதிகளின் குடும்ப நல சபா

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  அரசியல் வாதிகள் உழைத்து சம்பாதித்தால் மட்டுமே நாடு உருப்படும் .. லஞ்சம் மறையும் . இதற்க்கு ஒன்றுமட்டுமே போதும் பாதுகாப்பு ,ஊதியம் எடுத்துவிட்டால் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்

Advertisement