Advertisement

பா.ஜ தொண்டருக்கு பிரியங்கா, 'பாடம்!'

இந்துார் : மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் பொது செயலர், பிரியங்காவை பார்த்து, கூச்சலிட்ட, பா.ஜ.,ஆதரவாளர்களிடம், அவர், கைகுலுக்கி நட்புடன் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரசார கூட்டம் ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள எட்டு லோக்சபா தொகுதிகளுக்கு, வரும், 19ல், தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி, தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, காங்., பொது செயலர் பிரியங்கா, நேற்று இந்துார் வந்தார். விமான நிலையத்தில் இருந்து, பிரசார கூட்டம் நடக்கும் இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்ற, பா.ஜ., ஆதரவாளர்கள், பிரியங்காவை பார்த்து, 'மோடி... மோடி...' என கூச்சலிட்டனர்.

இதை பார்த்ததும், தன் கறுப்பு நிற, 'டாடா சபாரி' காரை நிறுத்தி, இறங்கி வந்த பிரியங்கா, கூச்சலிட்டவர்களிடம் கைகுலுக்கினார். இதை சற்றும் எதிர்பாராத, பா.ஜ., ஆதரவாளர்கள், முதலில் அதிர்ச்சி அடைந்தனர். பின், இயல்பாக அவருடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

உற்சாகம் :அவர்களுடன் சில வார்த்தைகள் நட்புடன் பேசிய பிரியங்கா, பின், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக, ம.பி.,யில் உள்ள ரட்லம் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரியங்கா நேற்று பேசினார். கூட்டம் முடிந்து புறப்படுகையில், மக்கள் அவரைப் பார்த்து, உற்சாகத்துடன் கை அசைத்தனர்.

இதையடுத்து, கூட்டத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டு இருந்த மர தடுப்பை, திடீரென ஏறி குதித்து தாண்டிய பிரியங்கா, மக்கள் அருகே சென்று, கை குலுக்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர், அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (41 + 11)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதன் விளைவுதான் இது

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  அதை இப்படி புரிஞ்சுக்கோணும் .முடிவுகள் வந்த பின்னே அந்த அம்மா காரில் இருந்து இறங்கவே முடியாது

 • வல்வில் ஓரி - Koodal,இந்தியா

  கான்கிராஸ் காரன் ஆட்சியில இருந்தா இப்போ நடக்கிறது வேற மாதிரியா இருந்திருக்கும்...இப்போ வேற ஒன்னும் பண்ண முடியாது...

 • Subramaniam Ramesh - madurai,இந்தியா

  இவுங்களே பாம் வைப்பார்களா இவுங்லே எடுப்பார்களா (முதல்வன் வசனம்)

 • Bhagat Singh Dasan - Chennai,இந்தியா

  நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா

'மோடி கோஷம்'; வாழ்த்திய பிரியங்கா (11)

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  அதற்குத்தான் முன்னோர்கள் சொன்னார்கள் ..பரம்பரை குணம் என்றுமே இருக்குமென்று ..இது ஒரு வகை ... மற்றொன்று கருத்துக்கள் கூறியவர்கள் தங்களின் பரம்பரை குணத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளதும் காணப்பட்டுள்ளது

 • Azhagan Azhagan - Chennai,இந்தியா

  இதெல்லாம் நடிப்பு ஓட்டுக்காக எல்லாம் 23 வரை மட்டும் தான்.

 • Azhagan Azhagan - Chennai,இந்தியா

  கபட நாடகம். வேறொன்றும் இல்லை.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  இந்த ஊழல் ராபர்ட் வாத்ராவின் மனைவியால் வேறு என்ன செய்யமுடியும்?? எப்படிப்பட்ட ஊழல்?? கட்டுமர குடும்பத்திற்கு நிகராக

 • வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா

  இவர்கள் ஆட்டமெல்லாம் மே 23 நண்பகல் வரை மட்டுமே.

 • smoorthy - bangalore,இந்தியா

  திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் அரசியல் பண்பை அல்லது அரசியல் நாகரீகத்தை அனைவரும் பின்பற்ற சொல்லி கொடுத்தது போல் உள்ளது / வாழ்த்துக்கள் மேடம். மகிழ்ச்சி

 • karthik - ,

  அவர்களை அடையாளம் காட்டிவிட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

  இது தான் மேன்மக்கள் என்று ஊரில் சொல்லுவார்கள். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை கிடைப்பார் இது தான் பிஜேபி க்கும் காங்கிரஸ் க்கும் உள்ள வித்தியாசம்

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  தேர்தலின் இறுதி கட்டம். நாடகத்திலிருந்து எம்மை காப்பாற்றுவீராக கர்த்தரே.

 • தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா

  சங்கு சுட்டாலும் வெண்மை தரும். மேன்மக்கள் மேன்மக்கள்தான், "நீச் ஆத்மீ" கிடையாது.

Advertisement