Advertisement

'டவுட்' தனபாலு

தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா : நதிநீர் இணைப்பு, நாட்டிற்கு தேவையான திட்டம். நரேந்திர மோடி, மீண்டும் பிரதமாக பதவி ஏற்கும்போது, நதிநீர் இணைப்பு குறித்து, நாங்கள் நிச்சயம் வலியுறுத்துவோம்.

டவுட் தனபாலு : கடந்த, 2014ம் ஆண்டிலும், பா.ஜ., கூட்டணியில் தான் இருந்தீங்க... இன்றுவரை, எதற்காகவெல்லாம், பிரதமரைச் சந்தித்து, வலியுறுத்தி இருக்கீங்க என்ற, பட்டியலைக் கொஞ்சம் கொடுங்களேன்... மக்களின், 'டவுட்' தீரட்டும்...!

ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர், லாலு பிரசாத் யாதவ் : பீஹார் முதல்வர், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேர்தல் சின்னமான, அம்பு, வன்முறையை குறிக்கிறது. எங்களுடைய சின்னமான, லாந்தர் விளக்கு, மக்களுடைய அறியாமையை நீக்கி, அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்கும்.

டவுட் தனபாலு : சின்னத்தை வைத்து, சித்துவிளையாடுறீங்க... அப்படிப் பார்த்தால், ஊழலில் சிக்கிய உங்க லாந்தர் விளக்கு, இப்போ சிறைவாசிகளுக்கு தானே, வெளிச்சம் தந்துகொண்டிருக்கு... அம்புவோ, எந்த வம்பு வழக்குக்கும்போகாமல், அநீதிகளை எதிர்த்து, தாக்கி வருது... இதுல, எது நாட்டுக்குத் தேவை என்பதுதான், மக்களின், 'டவுட்!'

தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் : ராஜிவ் கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஏழு பேரை விடுதலை செய்ய, உச்சநீதிமன்றமே பச்சைக்கொடி காட்டிய பிறகும், தமிழக கவர்னர் மவுனம் சாதிப்பது, வருத்தத்திற்குரியது.

டவுட் தனபாலு : மாநில அரசின் விவகாரம் என்றால், கவர்னரிடம் முறையிடுவீங்க... இந்த விஷயத்தில், யாரிடம் முறையிடுவதுன்னு யோசிக்குறீ்ங்களா... இல்லை, ஏழு பேர் விடுதலைக்கு அழுத்தம் கொடுத்தால், காங்., வருத்தப்படும்னு, பட்டும் படாமலும் நடந்துக்குறீங்களா என்ற, 'டவுட்' வருதே...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement