Advertisement

எஸ்.எஸ்.எல்.சி., ரிசல்ட்: ஏப்.,29 வெளியீடு

சென்னை : ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் வரும் ஏப்ரல் 29 அன்று காலை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அரசுத் தேர்வு இயக்ககம் அறிவித்துளளது.

இவ்வாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.97 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதன் விடைத்தாள்களை திருத்தும் பணி, கடந்த 1-ம் தேதி, தொடங்கி 16-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த தேர்வு முடிவுகளை ஏப்.29 திங்களன்று காலை, www.tnresults.nic.in, www.tge1.tn.nic.in, www.tge2.tn.nic.in ஆகிய இணைய முகவரிகளில் அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிவெண் மற்றும் பிறந்தநாள் ஆகியவை அவசியம். தங்களுடைய மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 19-ம் தேதி வெளியானது. இதில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement