Advertisement

வாரணாசியில் மோடி மனுத்தாக்கல்

வாரணாசி: உ.பி.,யின் வாரணாசி லோக்சபா தொகுதியில் பிரதமர் மோடி இன்று (ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்தார்.2014 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, 3.71 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 லோக்சபா தேர்தலிலும் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக நேற்று (ஏப்.,25) வாரணாசியில் திறந்த வாகனத்தில், தொண்டர்களுடன் பேரணியாக சென்ற மோடி, கங்கை நதியில் நடந்த பூஜையில் பங்கேற்றார்.

தொடர்ந்து இன்று காலை கட்சி தொண்டர்களிடையே உரையாற்றினார். பின்னர் அப்பகுதியில் உள்ள காலபைரவர் கோயிலில் வழிபாடு நடத்திய மோடி, கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். பின்னர் ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். பாடலி வித்தியாலயா பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அன்னபூர்ணா சுக்லா, பிரதமர் மோடியை முன்மொழிந்தார். முன்னதாக அன்னபூர்ணாவின் கால்களை தொட்டு பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
வேட்புமனுத்தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, '' காசி நகர் மக்கள் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்று ஆதரித்தமைக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல், அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் மோடி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • KumariKrishnan Bjp - chennai,இந்தியா

  உலக நாயகன் நரேந்திரமோடி இவர் இந்திய ஊழல்வாதிகளை ஒழித்துக்கட்டுவார்

  • truth tofday - india,இந்தியா

   அப்படினா போன தேர்தலிலும் இவர் தான் உலை ஒலித்துக்கட்டுவர் அனல் இன்னும் உல்லல் இருக்கு ஒலிக்கவில்லை அதனில் இவர் இனி உலகளை ஒழிக்க போகிறார் போன தேர்தல் மாதிரி கட்சிகள் டொனேஷன் பேரில் பணம் வாங்குவது உழல் இல்லை என்ன நேர்மை என்ன நேர்மை

 • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

  துரோகிக்கு துணையாக, தமிழகத்தில் இருந்து கூட ஒரு துரோகி சென்றதாக தகவல்.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   தமிழ்நாட்டு பப்புவிற்கு ஆதரவாக வடநாட்டு பப்பு கூட முன்னர் இங்கே வந்திருந்தாரே.

  • Rajavelu E. - Gummidipoondi,இந்தியா

   புரிஞ்சிடுச்சா நன்றி.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  பிரியங்கா போட்டியிடாமல் பின்வாங்கியதே அவர்களின் தோல்வியை காட்டுகிறது. இந்தியா முழுவதும் இந்த தோல்வி தொடரும்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  தினமும் மூணு மணி நேரம் தான் மோ__ உறங்குவதாக பொ.ரா.கி. ட்விட்டர் பண்ணியிருக்கார். ஆனா, மோ__ என்னவோ, மம்தா பானர்ஜிக்கு தூக்கம் போச்சு.. என்று பேசிக் கொண்டிருக்கிறார். இவருக்கே தூக்கம் போயிக் கிடக்கிறார், பாவம்.

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பணத்தை விட்டெறிந்து கூட்டம் கூட்டி அத வேற போட்டு பாத்துக்கறாங்க. பயத்தில் வெளிறிய தல முகம் பரிதாபமாக தோற்றம் அளிக்கிறது. மேக்கப் மேன் சரியில்லை.

  • Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா

   ஹா ஹா ஹா. அமேதியிலே வந்த கடும் எதிர்ப்பை பார்த்து, மரணஅடி நிச்சயம் என்கிற பயத்தில் பயபுள்ள வயநாட்டிற்கு ஓட, அவன் தங்கை அதற்கும் ஒருபடி மேல்போய் வாரணாசியில் போட்டி என்று பெரிதாக ரீல்சுற்றிவிட்டு பிறகு நிலைமையை பார்த்து, ஆயிரம் ஓட்டுக்கூட நமக்கு தேறாது என்பதை புரிந்து கொண்டு போட்டியில்லை என்று அறிவிக்க வேண்டியதாயிற்று. தமிழ்நாட்டிலோ சுடலை, நம் வேலூர் கவர் ஆனந்த் போல் பணத்தை தண்ணீராய் செலவழித்தும் போடப்பட்ட சேர்களே நிரம்பாமல் விழிபிதுங்க எங்கே ஆர்கே நகர் நிலைமை வந்துவிடுமோ என்று அச்சத்தில் இருக்க, முதலில் இவர்களுக்கல்லவா மேக்கப்மேன் தேவை.

  • Krishnan - Coimbatore,இந்தியா

   புகழு, நீ போடுற கருத்துக்களோடு தரத்தை பாத்தா நீ IIT வாசல்ல காவல்காரனா நிக்க கூட சான்ஸ் இல்லை.

Advertisement