Advertisement

ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு தடை

புதுடில்லி : நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பல்லோ நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவரது மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்தது. ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.

விசாரணை கமிஷனில் அப்பல்லோ டாக்டர்களை விசாரிக்க 21 பேர் கொண்ட குழுவை அமைக்கவும் அப்பல்லோ நிர்வாகம் கோரிக்கை வைத்தது. மேலும் போதிய விபரங்கள் அளிக்கப்பட்ட பிறகும் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பவதற்கும் அப்பல்லோ நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு காரணமாக ஆறுமுகசாமி கமிஷன் அனுப்பிய சம்மனுக்கு ஆஜராகாமல் அப்பல்லோ டாக்டர்கள் தவிர்த்தனர்.

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அப்பல்லோ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, ஆறுமுகசாமி கமிஷன் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அப்பல்லோ நிர்வாகத்தின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (30)

  • Berlioz - paris,பிரான்ஸ்

    உண்மை தெரியும் ஆனா தெரியாது நம்ம விசாரணை கமிஷன் வைத்து விசாரிப்போம் ஆனா உண்மையை ஒருகாலமும் வெளியிடமாட்டோம் , நாங்களும் அதை சிறிது காலத்தில் மறந்து விடுவோம்

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    உடனடியாக இட்லி கமிஷன் நியமிக்க பிராது கொடுக்க எவனாவது ஒரு வக்கீல் தேவை

  • adalarasan - chennai,இந்தியா

    6 மாதங்களில், அறிக்கை தாக்கல் செய்யும்படி, முதலில் உத்தரவு…?இப்பொழுது 3 ஆண்டுகளாக…? இன்னும் முடிந்த பாடில்லை…?

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    சுதந்திரம் பெற்றது முதல் இது போன்ற கமிஷன் என்ற சொன்னாலே மக்களின் பல கோடி வரிப்பணம் வீண்? யார் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததும் இல்லை, எடுக்கப்போவதும் இல்லை, மக்களை திசை திருப்பவே இதுபோன்ற செலவுகள், சர்க்காரியா விஞ்ஞான ரீதியாக என்று கூறிவிட்டார், நடந்தது என்னமோ உண்மை ஆனால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு என்று நீதி வாங்கிவிட்டார், பிறகு கமிஷன் வைத்தவர்களுடன் அரசிலியலில் கூட்டு ?? ஆக ஏமாந்தவர்கள் மக்கள், இங்கு நாம் நீதியையோ அல்லது நீதிமன்றத்தையோ குறை கூற வரவில்லை, மொத்தத்தில் எதுவுமே நடக்காது என்று தெரிந்தும் எதற்க்காக இப்படி ஒரு செலவு ? வந்தே மாதரம்

    • sivan - Palani,இந்தியா

      இந்த நீதிபதி செய்த முதல் தவறே.. முதல் குற்றவாளி சசிகலா சார்பில் ஒரு வக்கீலை நியமித்து சாட்சிகளை குறுக்கு விசாரணையை செய்ய சொன்னதுதான். இது போல முட்டாள்தனம் எதுவும் இல்லை. சசிகலா குடும்பம் அடாவடி குடும்பம் ..அப்படி இருக்க அவரது வக்கீல்கள் முன்னிலையில் சாட்சிகள் எப்படி பேசுவார்கள்?

  • ஆப்பு -

    இட்லி, தோசைக் கணக்கு 1.17 கோடி செலவாயிருக்கே...அத்தையாவது விசாரியுங்க ஐயா...

    • Ramakrishnan Natesan - BANGALORE

Advertisement